Browsing: கோவை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

கோவை சூலூர் அருகே நள்ளிரவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குச்சிகளை நட்டு இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

முதுமலையில் இருந்து கோவை சாடிவயல் முகாமிற்கு 38 ஆண்டு காலப் பெண் யானை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது; வனத்துறையினர் இதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கோவையில் சாலையில் கிடந்த ரூ. 9,500 மற்றும் ஆவணங்கள் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 4-ம் வகுப்பு மாணவி ஜான்விக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சூலூர் அருகே மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபர் தந்தை, மகள் மீது மோதிய பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பல்வேறு ஆதீனங்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.4 கிலோ கஞ்சாவை பேரூர் போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை துடியலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூரில் மயானம் இல்லாததால் 40 ஆண்டுகளாக போராடும் 4000 கிறிஸ்தவ குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளனர்