Author: Prime Reporter

கோவையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read More

2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி போடும் என கருணாநிதி ஓபனாகவே கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றினார். இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, பிரேமலதா தலைமையிலான தேமுதிக கூட்டடணி அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இந்த நிலையில், முதன்முறையாக 2026 தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விஜயகாந்த் avl கலைஞரை எதிர்த்து தேமுதிகவை தொடங்கி தேர்தலை சந்தித்தபொழுது அவருக்காக வாக்கு சேகரித்தவள் நான். மண்டபத்தை இடித்தவர்களுடன் கூட்டணி வைத்து கேப்டனின் கனவை இடித்துவிட்டார்கள். விஜயபிரபாகரன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்வாரா? பிரேமலதாம்மா தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்.

Read More

ஸ்ரீலீலாவுக்கு அடிச்சது ஜாக்பாட்.. அஜித் உடன் இணைந்து பணியாற்றும் உச்ச நட்சத்திரங்கள்! நடிகரும், கார் ரேஸருமான அஜித் நடித்து சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம், குடும்ப ஆர்டியன்ஸ்களை கவர தவறிய நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்த நிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முக்கியமாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். டிரெண்டிங் நாயகி ஸ்ரீலீலாவும், இயக்குநர் மிஷ்கினும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிபி பிரகாஷ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

Read More

சுவையான தக்காளி தொக்கு வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்பதை அறிந்து தினசரி உணவில் சேர்த்து ருசிக்கலாம்.

Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அஇஅதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. ஸ்டாலின். ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன். நேற்று மாலை, தனது தொடர் “ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்” அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், “விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு” திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான…

Read More

மிருணாள் தாக்கூர் தொடர்பான சமீபத்திய தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி புதிய திரைப்பட அப்டேட் குறித்து எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

Read More

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை அறிவித்துள்ளார்.இது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி போட்டுள்ளது குறித்து, தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது

Read More

மமிதா பைஜு பற்றிய சமீபத்திய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Read More

ஹரி நாடார் தொடர்பான சமீபத்திய அரசியல் நிகழ்வு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி ஆதரவும் எதிர்ப்பும் கிளப்பியுள்ளது.

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read More