Author: Prime Reporter
72 வயதை தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ரஜினிகாந்த், கைவசம் ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இதனிடையே ரஜினி – கமல் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை, உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 7.12க்கு வெளியான போஸ்டரில் ரஜினி கமல் உள்ளது மட்டும் தெளிவாக தெரிந்துள்ளது. மற்றபடி படத்தில் யாரெல்லாம் இணையுள்ளார்கள் என்பது குறித்து நாளை அப்டேட் வெளியாக உள்ளது. 7.12கு வெளியிட்டது ஏன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கமல் பிறந்தநாளான 7ஆம் தேதியும், ரஜினி பிறந்தநாளான 12ஆம் தேதியும் வைத்து இந்த நேரத்தை தேர்வு செய்துள்ளனர். தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணியில்…
திமுக தேமுதிக இடையே இன்று கூட்டணி உறுதியானது. தேமுதிகவின் முடிவு குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல.. தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி. ஏற்கனவே அந்த பாழுங்கிணற்றுக்குள் இருப்பவர்கள் எல்லோருமே தங்கள் எண்ணிக்கை நிலையை எண்ணிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். ‘யார் இருப்பார், யார் தாவுவார்’ எனத் தெரியாமல், ‘யாராவது இருக்கீங்களா? பயமா இருக்குது!’ என அலறி வருகிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த ஓனர், மேற்கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் வண்டியில் ஏற்றலாம் என முடிவு செய்துவிட்டார். இட ஒதுக்கீட்டைத் தாங்கள்தான் கண்டுபிடித்தோம் எனப் போலி வியாக்கியானம் பேசும் கூட்டம், கூட்டணி ஒதுக்கீட்டைக்கூடக்…
வாய்ப்பு கேட்க தயங்கவில்லை என மிருணாள் தாக்கூர் கூறிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
உப்பு அதிகமாக சேர்த்து சாப்பிடக் கூடாத நான்கு உணவுகள் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனம் அவசியம்.
கோவையில் சந்திரயான் சிலை திறப்பு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்களுக்கு உற்சாக உரை நிகழ்த்தினார்.
புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அரிசி நீர் உடல்நலத்திற்கு பல நன்மைகள் தரும் பாரம்பரிய பானமாக இருந்து தோல் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
நடிகர் தனுஷ், D55 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்க. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஆக்ஷ்ன் அதிரடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில், ஸ்ரீலீலா. சாய் பல்லவி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் மம்மூட்டி நடிக்க, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். இந்த நிலையில் சமீப நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் தனுஷ், இந்த முறை கொங்கு மண்டல ரசிகர்களை சந்தித்துள்ளார். சந்திக்க வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Our beloved @dhanushkraja sir met fans club members from Coimbatore, Coimbatore South, Salem, and Karur! Spread 💕 love !! @theSreyas #D55 pic.twitter.com/8vfqljbfuM— RAJA B RAJA (@B_RAJA_) February 19, 2026 மேலும். ரசிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வழங்கிய தனுஷ். அசைவ விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
கோடைகால சிறப்பு தொகை ரூ.2000 இனி ஆண்டு தோறும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். இதற்க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசு தோல்வி பயத்தில் நாளொரு அறிவிப்பினை வெளியிட்டு ஓட்டுக்காக மக்களைக் கவர முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது. இன்று சட்டசபையில் இனி வருடந்தோறும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ. 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் விரோத திமுக அரசின் உச்சகட்ட தோல்வி பயத்தினை வெளிக்காட்டியுள்ளது. கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்து விட்டு கடைசி 5 மாதத்தில் மட்டும் முதல்வருக்கு ஞானோதயம் பிறந்து விட்டதா? அல்லது இந்த மக்களை ஏமாற்றி விட்டோமே என்று மனசாட்சி உறுத்தி விட்டதா? அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பொங்கல் சிறப்பு பரிசு 3000, மாணவர்களுக்கு…
மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமாக தேர்வு செய்வது அவசியம்.
