Author: Prime Reporter
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சில முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தவெக ஆட்சி அமைந்ததும், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தமது முதல் பணி என கூறினார். சட்டம்–ஒழுங்கு மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தரமான கல்வியை வழங்கும் வகையில் மேம்படுத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்காக அதிக செலவில் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது; அரசுப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களே போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்படும். உயர்நிலை வகுப்புகளிலேயே அடிப்படை அரசியல் மற்றும் அரசியல் சாசனச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள், அவற்றை அணுகும் நடைமுறை போன்றவை மாணவர்களுக்கு செய்முறைப் பாடமாக கற்பிக்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்காக சுத்தமான, பாதுகாப்பான மற்றும் கதவுகள்…
கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அரசியல் கட்சிகள் விளக்கம் கேட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி பள்ளி மாணவர்களின் புதுமை திறன்களை வெளிப்படுத்தி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டுக்களை பெற்றது.
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களிடம் பேசியார். அவர் கூறுகையில், “இன்றைய பேச்சுவார்த்தை அமைதியான மற்றும் நல்ல சூழலில் நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் முன்வைத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து கலந்தாலோசித்த பின் இறுதி முடிவுகள் குறித்து அறிவிப்போம். கூட்டணித் தொடர்பு தொடர்ச்சியான ஒன்று; அது இடைநிறுத்தமின்றி முன்னெடுக்கப்படும். மேல்சபை எம்.பி. பதவி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கூடுதல் தொகுதிகளையும் கேட்டுள்ளோம். அவர்களிடமிருந்து பதில் கிடைத்தவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இதுவரை தொகுதிகளின் பட்டியல் வழங்கப்படவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் யாரும் கூறவில்லை. வரவிருக்கும் தேர்தலில் ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டியிடும்,” என்றார்.
மாதவிடாய் காலத்தில் வெறும் வயிற்றில் சங்குப்பூ டீ சாப்பிட்டால் வயிற்று வலியை குணமாக்கும். மேலும், சின்ன வயதிலேயே முடி கொட்டுவதை சங்குப்பூ தவிர்க்கிறது. சங்குப்பூ நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும், மனசோர்வை குறைக்கும் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் சங்குப்பூ உதவும். குறிப்பாக சங்கு பூட்டி உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. மேலும், சங்கு பூ சாதம், தாய்லாந்தில் பிரபலமான உணவாகும். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பிய சங்கு பூ சாதத்தை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் சங்குப்பூபாஸ்மதி அரிசிநெய்முந்திரிஇஞ்சி பூண்டு பேஸ்ட்பட்டைகிராம்புஉப்பு செய்முறை Step 1: 250 கிராம் பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி 30 நிமிடங்கள் அதனை ஊற வைக்க வேண்டும். Step 2: பின்னர் பாத்திரத்தில் 250 கிராம் பாஸ்மதி அரிசியை வேக வைப்பதற்கான தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். Step 3: தண்ணீர் கொதித்தவுடன்…
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை மூலம் கடின உழைப்பை போட்டு பெரிய திரைக்கு வந்தார். குடும்பம், காதல், நகைச்சுவை படங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். கடந்த 2024 வருடம் எஸ்கே நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்துக்காக தனது உடலை மெருகேற்றி கடினமாக உழைத்திருந்தார். உழைப்புக்கு ஏற்ற பலன் போல தற்போது அந்த படத்தில் நடித்தற்காக எஸ்கேவுக்கு ஃபிலிம் ஃபேர் விருது அறிவிக்கப்பட்டது முதல்முறையாக ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரிய சாமி இயக்கிய அந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்திருந்தார். 300 கோடி ரூபாய்க்கு மேல் படம் பெரிய ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல், எஸ்கேவின் கேரியரில் முக்கிய மைல்கல் படமாக அமைந்தது. இதன் பின்னர் தான் தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் உயர்த்தினார் அமரன் படத்துக்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர்…
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. இவர் பல சீரியல்களில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்து வந்தார். ஆனால் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது. இவரின் சகோதரி தான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிய நடிகை டிடி என்கிற திவ்யதர்ஷினி. டிடி குறித்து ஓபனாக பேசியுள்ள பிரியதர்ஷினி, நான் தான் வீட்டில் மூத்தவள். ஆனால் என் குடும்பம், அம்மா, தம்பி என அனைவரையும் கவனித்து வந்தவள் என் தங்கை டிடி. அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்னும் எங்களாலே மீளமுடியவில்லை. அவளும் அப்படித்தான் உள்ளார். காதல் திருமணம் பார்த்து பார்த்து செய்தும், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. அந்த வலி இன்னும் எங்கள் குடும்பத்தை விட்டு நீங்கவில்லை என கூறியுள்ளார். டிடி கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்தவரையே திருமணம் செய்தார். ஆனால் சீக்கிரமே அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதில் இருந்து தற்போது வரை டிடி இரண்டாவது…
கட்டு விரியன் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது, உடனடி சிகிச்சை அளிக்க முடியாமல் துயரம் நிலவுகிறது.
ஒரு குடும்பத்தால் அண்ணா உருவாக்கிய அறிவியக்கம் சூறையாடப்படுவதை நாடு பார்க்கிறது என தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாலில் படுநெய்யாய், விறகில் தீயாய் எல்லாக் குடும்பத்திலும் தவெக வியாபித்திருக்கிறது. அதனால்தான் குடும்பத்தை அரசியல் படுத்துங்கள் என்று இளவரசர் இதோபதேசம் செய்கிறார். அண்ணா பந்தபாசத்தோடு திமுகவை வளர்த்தார்; இவர்கள் திமுகவை வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்கள் குடும்பப்பாசத்தை மட்டும் வளர்த்தார்கள். ஒரு குடும்பத்தால் அண்ணா உருவாக்கிய அறிவியக்கம் சூறையாடப்படுவதை நாடு பார்க்கிறது; கேடு சூழ்கிறது. இதற்கு முடிவுகட்ட முடிவிலாப் போருக்கு முகம் தந்துவிட்டார் தளபதிவிஜய். வெல்லல்போகிறார் விஜய் என்று மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்..! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி காயமடைந்தது, பொதுமக்கள் தகவலின் பேரில் வனத்துறை மீட்டு சிகிச்சை அளித்தது.
