Author: Prime Reporter
கோவை மாவட்டத்தின் தேர்தல் ஐகானாக தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி அளித்த பேட்டியில் அரசியல் நிலவரம் மற்றும் முக்கிய கருத்துகள் குறித்து விளக்கம் வழங்கினார்.
கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது” என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். 101 வயதாகும் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்மதார். தென் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நல்லகண்ணு சாதி கொடுமையை தீவிரமாக எதிர்த்து வந்தார். இளம் வயதிலியே சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்று வந்தார். இயற்கை வளங்களை காக்க தொடர்ந்து போராடி வந்தவர். தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளை காக்க போராடினார். பொதுவாழ்வில் நேர்மை, தொண்டு , தியாகம், எளிமையின் அடையளமாக திகழ்ந்த நல்லகண்ணு 1925 டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் பருவத்தில்…
கில்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வின்செட் அசோகன் குறித்து ரசிகர்கள் மீண்டும் பேசும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார் தவெக தலைவர் விஜய். வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல் குறித்து நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். செய்றகை சுவாச கருவியுடன் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 24 மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் நல்லகண்ணு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது தவெக தலைவரும், நடிகருமான விஜய், ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு…
நடிகை தமன்னா பகிர்ந்த இலவச ஆலோசனை குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து பேசுகின்றனர்.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நேற்று முன்தினம் வேலூரில் தவெக தலைவர் விஜய், தனது நிர்வாகிகள சந்தித்து பேசினிர். அதில் அவர் சொன்ன குட்டி ஸ்டோரி குறித்து இணையத்தில் பரவலாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். இதனிடையே விஜய் பேச்சு குறித்து விமர்சித்து பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் பிக் பாஸ் ஜூலி. இதற்காக ஜூலியை கிண்டல் செய்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் பறக்க விட்டு வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வேலூரில் நீங்க பேசிய உரையில் ஒண்ணும் இல்லை என கூறி வீடியோ வெளியிட்டேன். அதற்கு உங்கள் ரசிகர்கள் இணையத்தில் என்னை கடித்து வைத்துள்ளனர். என்னை அவர்கள் மிரட்டுகிறார்கள், அதற்காக நான் பயந்து வீடியோவை டெலிட் எல்லாம் செய்ய மாட்டேன், என்னை மிரட்டினால் பரவாயில்லை, என்னை சார்ந்துள்ளவர்களை மிரட்டியதால்தான் இந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார். என்னை பழி வாங்க வேண்டும் என்றால், நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ…
