Author: Prime Reporter
அவசரகதியில் போடப்பட்ட புதிய தார் சாலை மழையால் பெயர்ந்து போனதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை கோரினர்
அரசுப்பள்ளி மாணவர்களின் விமானப்பயண கனவு நனவாகி முதல் முறையாக பறந்த அனுபவம் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.
தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரும் பள்ளி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று வந்திருந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட முஸ்லீம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் வருகையின் போது மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பேணி கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைவிடுத்து, மாநிலத் தலைநகரிலேயே போராட்டங்கள் நகைபெறும் அளவிற்கு காவல்துறை மெத்தனமாக செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் பாசிச கரம் கொண்டு ஒடுக்கிவிட்டு, நேற்று தலைநகரின் முக்கிய இடத்திலேயே சிலர் போராட அனுமதித்துள்ளது திமுக அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசு தனது இந்த இரட்டை வேடத்தாலேயே அழியும் நாள் தொலைவிலில்லை! இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவில் உப்பு அதிகமாக சேர்த்தால் உடல்நல பிரச்சனைகள் அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயம் உயரும் என்பதை தினமும் சரியாக கட்டுப்படுத்த கவனிக்க வேண்டும்
பீர்க்கங்காயை பயன்படுத்தி சுலபமாக வீட்டிலேயே குருமுருப்பான பஜ்ஜி செய்வது எப்படி என்பதை இந்த ரெசிபியில் பார்ப்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டிருப்பதும், அவர்களைக் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. நாட்டை வழிநடத்திச் செல்லும் பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கும் வேளையில், அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் விதமாகவும், அவரை இழிவுபடுத்தும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் வேளையில், அதைக் கண்டுகொள்ளாத அளவிற்கு, திமுக அரசின் கண்ணை அரசியல் காழ்ப்புணர்ச்சி மறைத்துவிட்டதா? ₹4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழகத்திற்குப் பிரதமர் அவர்கள் வழங்கியதற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, அடிப்படை சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? உண்மையில், இதுபோன்றதொரு செயலில் ஈடுபட்ட காங்கிரஸைக் காட்டிலும், அதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியம் பெரும் கண்டனத்திற்குரியது.…
அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது. அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்பும், அதிமுகவை மீட்க பல வியூகம் அமைத்து, கோர்ட் படியேறிய அவருக்கு தோல்வியே கிடைத்தன. இறுதி வாய்ப்பாக என்டிஏ கூட்டணியில் இணைய பலமுறை முயற்சித்தும், எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டதால் அவர் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கழகத்தின் தம்மை இணைத்துக் கொண்ட பிறகு சென்னையில் உள்ள எனது முகாம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியது உவகை அளிக்கிறது. திரு. ஓபிஎஸ் அவர்கள் நெடுங்காலமாக உத்தமபாளையத்தில் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், அவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நான் அரசியலுக்கு நுழையாமல் வங்கியாளராக இருந்தேன். அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக…
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஜூஸ் சத்துக்கள் நிறைந்து முடி வேர்களை பலப்படுத்தி ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
