Author: Prime Reporter
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தனது துள்ளலான நடன வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், Southern Railway, புதிதாக கட்டப்பட்ட Tiruchirappalli Divisional Railway Office அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் “கார்த்தவ்ய த்வார்” (Kartavya Dwar) என பெயரிட்டுள்ளது. “கார்த்தவ்ய த்வார்” என்பதன் பொருள் “கடமை வாயில்” (Gateway of Duty) ஆகும். தற்போது பாஜக அரசின் ஒரே “கடமை” இந்தி மொழியை திணிப்பதாகவே தோன்றுகிறது. எனவே, தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் பெயரை வழங்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் சகோதரர் அனில் குமார் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளது குறித்த செய்திக்கு, இணையத்தில் வைரலாகும்
தமிழக அரசியலில் விஜய் எடுத்துள்ள புதிய அவதாரம் பல விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. கூட்டணிக்கு விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தாததால் கடும் அப்செட்டில் விஜய் உள்ளார். இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விஷயம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் வெளியில் சொல்வேன் என சங்கீத கூறியுள்ளார். சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனு தொடர்பாக யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று…
நண்பர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பகுதி சோகத்தில் மூழ்கியது; போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் அஜித் சம்பள விஷயத்தில் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகி, புதிய பட ஒப்பந்தம் குறித்து சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு கண்டங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், சினிமா இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதியை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசி இன்று வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அபார முன்னேற்றம் கண்டுள்ளார். 790 ரேட்டிங் புள்ளிகளுடன், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை பின்னுக்கு தள்ளி அவர் உலகின் நம்பர் 1 பேட்டராக உயர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அரைசதம் பதிவு செய்த மந்தனாவின் சிறப்பான ஆட்டமே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2025ஆம் ஆண்டில் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தரவரிசையில் உச்சத்தில் இருக்கும் மந்தனா, சர்வதேச டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இதற்கிடையில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலானா கிங், சோஃபி எக்லெஸ்டோனை முந்தி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நான்கு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மூன்று இடங்கள் சரிந்து 12-வது…
நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும்…
