Author: Prime Reporter
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முளைக்கட்டிய வெந்தயத்தை எந்த நேரத்தில், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று எளிய மற்றும் பயனுள்ள மருத்துவ ஆலோசனைகள் இதோ.
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மூங்கில் அரிசி கிச்சடி செய்வது எப்படி? சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கும் ஏற்ற இந்தச் சத்தான உணவைத் தயாரிக்கும் எளிய முறை இதோ.
பிக்பாஸ் 9 மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த சுபிக்ஷா தற்போது ‘அறிவு’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆயுர்வேத மருத்துவரின் தாயார் கஸ்தூரி கொலை வழக்கில் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம். இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
கோவை வடவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த வீடாக மாற்றி, திமுக பிரமுகர் குடும்பத்துடன் குடியேறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
