Author: Prime Reporter
கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மதிய உணவில் பல்லி விழுந்தது தெரியாமல் சாப்பிட்ட 34 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி.
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையேயான உறவு குறித்த வதந்திகள் குறித்து, பாலிவுட் இயக்குனர் விக்ரம் பட் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதற்றம் மேலும் தீவிரமடைந்த நிலையில், ஈரான் நேற்று முதல் இஸ்ரேல் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், துபாயில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சிக்காக நடிகர் அஜித் தங்கியிருந்தார். அங்கு ஏற்பட்ட தாக்குதல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை திரும்ப முடியாமல் துபாயிலேயே தங்கியிருந்தார். இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “அஜித் பாதுகாப்பாக உள்ளார்” என முன்பே தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், துபாயில் இருந்த நடிகர் அஜித் இன்று பாதுகாப்பாக…
பிரபல நடிகர் தனுஷுடன் புதிய திரைப்படத்தில் சேர்ந்து முதன்முறை ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுதிய கடிதங்கள், பாராளுமன்றத்தில் எழுப்பிய விவாதங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் நாங்கள் பலமுறை தொடர்ந்து முன்வைத்து வந்த நீண்டநாள் கோரிக்கையே இது. பல ஆண்டுகளாக கோரிக்கைகளும் நினைவூட்டல்களும் சென்ற பிறகே இப்போது இந்த ஒப்புதல் வந்துள்ளது — அதுவும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், இது மதுரை மக்களுக்கும் தென் தமிழ்நாட்டின் முழுப் பகுதிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமான படியாகும்.…
இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தமிழக அரசு அனமதி மறுத்துள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்து மக்கள் கட்சி சார்பில், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருந்த தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, திமுக அரசு தடை விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது, விளம்பரங்களை அகற்றுவது, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை கேள்விக்குறியாக்குகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள், காவல்துறையின் முழு ஆதரவோடு, நமது நாட்டுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம், எந்தத் தடையும் இன்றி, கூட்டங்கள், பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்து சமய மக்கள் ஒற்றுமை பேரணிக்கும், உள்ளரங்கில் நடைபெறும் மாநாடு மற்றும் கருத்தரங்கம், பொதுக்கூட்ட…
தமிழகத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் சாதிய கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசு அக்கறையும் காட்டவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது…
வளைகுடா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் கோர் கரணமாக பெட்ரோலிய பொருட்கள் இந்தியா கொண்டு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா முழுவதும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை…
நடிகை சாரா அர்ஜுன், வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த படத்துக் பிறகு வடிவேலுவுடன் 16 படங்களை நிராகரித்தார்; காரணம் தன்மானமும் காமெடி அணுகுமுறை குறித்த மாற்றம்.
