Author: Prime Reporter

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் முதலைமச்சர் ஸ்டாலினிடம் நான்கு கேள்வி கேட்கிறேன் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா? தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது? முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?…

Read More

திமுக பேனர் சரிந்து பள்ளி மாணவி காயமடைந்த சம்பவத்திற்கு தவெக அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரத்தில், திமுக கூட்டணிக் கட்சியினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில், பள்ளி மாணவி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக, அந்த மாணவி உயிர் தப்பியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், முறையான அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்தப் பேனர் வைக்கப்பட்டிருந்தது குறித்து காவல் நிலையத்திலும், அரசு அதிகாரிகளிடமும் முன்பே புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆளுங்கட்சிக்குப் பயந்து பேனர் குறித்த புகார்களை அதிகாரிகள் தட்டிக்கழித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உரிய அனுமதி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தினர் வைக்கும் பேனர்களை எல்லாம் தேடிப்பிடித்து அராஜகமாக அகற்றும்…

Read More

கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read More

கறிவேப்பிலையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். கால்சியம் நிறைந்த இந்த சேர்க்கைகள் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

Read More

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் திமுக அரசை வன்மையாக கண்டித்து வருகின்றன. அந்த வகையில், பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் மயக்கம்: மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா உயிரெடுக்கும் விஷ உணவா? கோவை மாநகரம், கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ – மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்வாய்ப்பாக அனைத்து மாணவர்களும் உயிர் பிழைத்து விட்ட போதிலும், அவர்களுக்கு ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கோவை மாநகராட்சி பள்ளிகளின் சமையலறைகள் தூய்மையின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். மாணவர்களுக்கு…

Read More

நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது. இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு நடிகர் ரவி மோகன் தற்போது நேரடியாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தன்னைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனது வாழ்க்கையை அமைதியான முறையில் அமைத்துக்கொண்டு முன்னேறி வருகிறேன் என்று…

Read More

வீட்டில் இருக்கும் சேமியாவால் சுலபமாக சுவையான சேமியா அடை செய்யலாம். காலை டிபன் அல்லது மாலை ஸ்நாக்ஸாக சூடாக சாப்பிட சிறந்த ரெசிபி.

Read More

நம்ம கோவையில இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்துல, மேற்குத் தொடர்ச்சி மலையில சிறுவாணிக்கு அருகில் கம்பீரமா அமைஞ்சிருக்கிற இடம்தான் ‘தென்கயிலாயம்’னு அன்பா அழைக்கப்படுற வெள்ளியங்கிரி மலை. ஆதி சங்கரர் வழிபட்ட தலம், அகத்தியர் உட்பட பல சித்தர்கள், யோகிகள் தவம் புரிந்த இடம்னு இதுக்கு நிறைய சிறப்புகள் இருக்கு. கடல் மட்டத்துல இருந்து சுமார் 6000 அடி உயரத்துல வீற்றிருக்கிற ஈசனை தரிசனம் செய்றது நம்ம வாழ்நாள்ல ஒருமுறையாவது செய்திட வேண்டிய ஒரு சிலிர்ப்பான ஆன்மிகப் பயணம். இந்த வருஷம் நீங்க வெள்ளியங்கிரிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ உங்களுக்கான சூப்பர் கைடுதான் இந்தக் கட்டுரை! தென்கயிலாயம்: ஒரு பார்வையில் சிறப்பம்சங்கள் தல வரலாறு: வெள்ளியங்கிரிக்கு ‘தென்கயிலாயம்’ என்று பெயர் வந்தது எப்படி? பயணக் குறிப்புகளைப் பார்க்கும் முன், இந்த மலையின் மகிமையை விளக்கும் ஒரு சிறப்புக் கதையைப் பார்ப்போம். கைலாயத்தில் சிவபெருமான் ஆடிய ‘ஆனந்த தாண்டவத்தை’ தான் நேரில் காண…

Read More

கிரிக்கெட் உலகில் இந்தியா மீண்டும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று படைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை, இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். வெற்றியின் பின்னணியும் வரலாற்று சாதனையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் காட்டிய உறுதி மற்றும் ஆக்ரோஷமான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்தது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்துத் துறைகளிலும் தங்களின் முழு ஆதிக்கத்தைச் செலுத்தினர். இந்த வெற்றியின் மூலம்…

Read More

முகப்பரு பிரச்சனையை குறைக்கும் எளிய வழிமுறைகள்; தினசரி சரும பராமரிப்பு, உணவு, மற்றும் இயற்கை தீர்வுகள் மூலம் சருமம் ஆரோக்கியம்.

Read More