Author: Prime Reporter
2005-ஆம் ஆண்டு வெளியான பிரினீதா படத்தின் மூலமாக அறிமுகமானவர் வித்யா பாலன். பா, கஹானி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், மறைந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். இப்படத்திற்கு, பிறகு நாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அதிகப்படியாக கவனம் செலுத்து வருகிறார். தமிழில், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் பிரபலங்களின் திரைப்படக் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் ரீல்ஸ் செய்து வெளியிடுவார்கள். அதிலும், பிரபலங்கள் ஏதாவது ரீல்ஸ் செய்து விட்டார்கள் என்றால், அதனை உடனே வைரலாக்கி விடுவார்கள். அப்படித்தான், தற்போது நடிகை வித்யாபயாளன் க்யூட்டாக நடித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் செந்தில் கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை ரீல்ஸ் செய்துள்ளார். அவரின் அந்த வீடியோவிற்கு கீழ் தமிழ் சினிமா ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட்…
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம் செய்ததில் பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி என பாமகவின் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனைகளுக்கு 1100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு இணையான மருத்துவர்கள்…
நடிகை Rashmika Mandanna குறித்து பழைய ஆடியோ வைரலானதால், அதை நீக்க 24 மணி நேரம் அவகாசம் வழங்கி சட்ட நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் தீப்பந்தங்களுடன் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களே நடந்து வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக அரசை, எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றனர். இந்த சூழலில் திமுகவில் உள்ள கூட்டணி கட்சியான மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில்…
தமிழகத்தில் நடந்துள்ள குற்றச்சம்பவங்கள் குறித்து உள்துறை செயலர் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குறிப்பாக கடந்த ஆண்டுகளை பொறுத்தவதை குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் 1597 குற்றச்சம்பவங்கள் தற்போது 461ஆக குறைந்துள்ளதாக கூறினார். இந்த ஆண்டு நடந்த குற்றச்சம்பவங்கள் பற்றி எதுவும் சொல்லாததால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர் அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழக வருவாய்துறையும், காவல்துறையும் திமுகவின் துணை அமைப்புகள் போல செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை பொறுப்பு இயக்குனர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரின் மழுப்பலான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்யும் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்க்கும் வருந்தத்தக்க நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் 60 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருப்பதும்,…
அரிசி கழுவிய நீர் சருமம், முடி மற்றும் உடல்நலத்திற்கு பல நன்மைகள் தரும் இயற்கை மருந்து என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து லேசர் கதிர்களால் பூமிக்கு அனுப்பும் புதிய தொழில்நுட்பம் எரிபொருளுக்கு மாற்றாக உருவாகலாம்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியால் சென்னை பூந்தமல்லி சாலையில் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை.
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, அதைத் தடுக்கும் வழிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
