Author: Prime Reporter

கோவை போத்தனூரில் தண்ணீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் சென்ற லாரி சிக்கி பரபரப்பு ஏற்பட்டது.

Read More

பழனி முருகன் கோவிலில் பிரபல நடிகை திடீர் தரிசனம் செய்ய வந்ததால் பக்தர்கள் செல்பி எடுக்க அலைமோதினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு இன்று மதியம் நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப்பாதையில் இருந்து கீழிறங்கினார். கோயில் ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், நடிகை அமலாபாலுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Read More

தளபதி விஜய்யின் ஜனநாயகன் பட OTT ஒப்பந்தம் ரத்து; வெளியீட்டு தாமதம் மற்றும் சென்சர் பிரச்சினைகள் காரணம்.

Read More

ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது; கம்பி தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

Read More

திருப்பூரில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், வணிக சிலிண்டர்கள் விரைவில் தடையின்றி வழங்கப்படும் என்றும் பாரத் கேஸ் விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

திமுகவின் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கி வரும் முதலமைச்சருக்கு, தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ உள்ளரங்கில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அதற்குத் திமுக அரசு அனுமதி மறுத்து, சுவரொட்டி மற்றும் விளம்பரங்களைப் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாங்கள் நடத்தும் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கும் திமுக அரசு, மாற்றுக்கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து முடக்க நினைப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத முகம் மக்கள் முன்பு அம்பலப்பட்டுவிடும் என்ற பயமா? அல்லது, யார் எதிர்க்க முடியும் என்னும் அதிகாரமா?…

Read More

கோவை மாநகராட்சியில் மூன்று திட்டங்கள் திறப்பு; உக்கடம் பேருந்து நிலையம் புதிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Read More

இந்தியாவின வெளியுறவுக் கொள்கை குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று ஐ நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read More

விஜய்யுடன் திருமண விழாவில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு நடிகை த்ரிஷா பதிலளிக்காமல் மௌனமாக சென்ற வீடியோ வைரலாகிறது.

Read More

நடிகர் Ajith Kumar அவரின் கார் ரேசிங் ஆர்வத்தை பாராட்டி Mahindra & Mahindra நிறுவனம் Formula E தீம் SUV காரை பரிசளித்தது.

Read More