Author: Prime Reporter
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து பணியாற்றி வருவதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். மேலும் தனது கட்சி தலைமையில் கூட்டணி என்றும், கூட்டணி போடும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்திருந்தார். அதன்படி தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், இதுவரை தவெகவுடன் கூட்டணி போட எந்த கட்சியும் வரவில்லை. இதனால் தவெக தனித்து போட்டியிடும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கட்சியுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் விஜய், எப்படி பாஜகவுடன் கூட்டணி போட சம்மதித்தார் என தவெக நிர்வாகிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று கட்சியின் பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 120 மாவட்ட…
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட வேலை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் அபரிமிதமான ஆன்மீக சக்திகள், நேர்மறை ஆற்றல் மற்றும் அதன் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தமிழர்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் காந்தா ராவ் நினைவு விருது வழங்கும் விழாவில் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் காந்தா ராவின் திறமையைப் புகழ்ந்து பேசும் போது, அவரது வாள் சண்டை திறமை மற்றும் நடிப்பு குறித்து பாராட்டிய ராஜேந்திர பிரசாத், அதனை ஒப்பிட்டு முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரை குறிப்பிடும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆருக்கே பயம் ஏற்பட்டதாகவும், அதைக் குறிக்கும் வகையில் ஆட்சேபத்திற்குரிய சொற்றொடரை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதும், தமிழ் திரையுலகினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த கருத்தை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். குறிப்பாக…
பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேல்முதலம்பேடு பகுதியில் கடை நடத்தி வந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மூவரும் கஞ்சா போதையில் தான் இந்த வெறிச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதைத் தொடர்ந்து விளாத்திக்குளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை…
அடுப்பே இல்லாமல் செய்யும் பச்ச புளி ரசம் ரெசிபி; எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
5 ஆரோக்கிய ஜூஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்; பிரகாசமான சருமத்திற்கு உதவும் இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்.
மக்கள் திமுக மீது கோபமாக இருப்பதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை விளாத்திக்குளத்தில் இருந்து விரட்டியதே சாட்சி என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி! இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் திரு. ஸ்டாலின் அவர்களே? காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது இத்தோடு நிற்கப் போவது இல்லை.…
உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற “எஞ்சாய் எஞ்சாமி” பாடலைச் சுற்றிய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை உருவாக்கியதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதைக் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ராப் பாடகர் அறிவு இடையே கடுமையான கருத்து வேறுபாடு வெளிப்படையாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்த பாடல், வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. கிராமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த பாடல் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. ஆனால் அதற்குப் பின்னாலேயே படைப்புரிமை மற்றும் அங்கீகாரம் தொடர்பான விவாதங்கள் இருந்ததாக தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒருவர், “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ, ராப் பாடகர் அறிவிடமிருந்து ‘திருடி’ பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், பாடலின் உருவாக்கம் குறித்து விரிவாக விளக்கம்…
யூத் பட விழாவில் கென் கருணாஸை கலாய்த்து நடிகர் தனுஷ் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போலவே தோற்றம் கொண்ட நபர் ஒருவர், விளம்பரம் ஒன்றில் நடித்து வரும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
