Author: Prime Reporter

நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது. “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்,…

Read More

என்டிஏ உடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு தவெக மறுத்துள்ளது. இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர், தவெக முதன்மை செய்தி தொடர்பாளருமான சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை…

Read More

வரும் ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் என பரபரப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்புஎதுவும் வெளியிடவில்லை. ஒரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தவெக அதை மறுத்து வருகிறது. ஆனால் தொடர்ந்து என்டிஏ உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி “உண்மைக்குப் புறம்பான” செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னர்…

Read More

இப்தார் நிகழ்ச்சியில் வாயிலிருந்து ஏதோ எடுத்ததாக வைரலான வீடியோ குறித்து நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார்.

Read More

மோசடியில் ஈடுபட்டதால் கடுமையான நடிவடிக்கை எடுப்பேன் என பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு எச்சரித்துள்ளார். இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக செயல்பட்டு வரும் Amazon India மீது நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருள் கிடைக்காத நிலையில், அது “டெலிவரி செய்யப்பட்டுவிட்டது” என்று காட்டப்பட்டதாகவும், கடந்த 40 நாட்களாக வாடிக்கையாளர் சேவை மையம் எந்த தீர்வும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “அமேசான் இந்தியா எப்போது முதல் இவ்வாறான மோசடி செயல்களில் ஈடுபடத் தொடங்கியது என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் முன்பே பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த பெரிய அளவிலான ஃபர்னிச்சர் பொருள், என் அம்மாவிடம் வந்து சேரவில்லை. ஆனால், அமேசான் தரப்பில் அது டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக காட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க வாடிக்கையாளர்…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அன்றே தெரிந்துவிடும். இதனிடையே அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்று வரும் நிலையில், திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா இராஜ்ஜியம்…

Read More

மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் பட்டு சுமார் 3 வயது பெண் மயில் உயிரிழந்தது.

Read More

சிறுநீரகக் கற்களை இயற்கையான முறையில் கரைத்து வெளியேற்ற உதவும் சிறுகண் பீளை மூலிகை டீ தயாரிக்கும் முறை மற்றும் அதன் அபரிமிதமான மருத்துவப் பயன்கள் இதோ.

Read More