Author: Prime Reporter
ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்து 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் தவெக தலைவர் விஜய், தற்போது என்டிஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது இதுகுறித்து தவெக தரப்பிலோ, என்டிஏ தரப்பிலோ யாரும் அதிகாரப்பூர்வமாகவோ, சூட்சமாகவோ எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் இந்த செய்தி எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் என்டிஏவுடன் கூட்டணி வைக்க தவெக மாவட்ட செயலாளர்கள் பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒரு சிலர் வேண்டாம் என கூறுவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம்…
கோவையில் 14 வயது சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; 20 நாட்களாக டிஸ்சார்ஜ் இல்லையென குடும்பம் கண்ணீர்.
கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக சிங்காநல்லூர் அருகே உள்ள நீர் கோணம் பாளையம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக போலீஸ் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அதில் ஆறு பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் பின்னர் அவர்களை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து அவருடைய தம்பி தங்கை இசக்கி திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ்…
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து பணியாற்றி வருவதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். மேலும் தனது கட்சி தலைமையில் கூட்டணி என்றும், கூட்டணி போடும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்திருந்தார். அதன்படி தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், இதுவரை தவெகவுடன் கூட்டணி போட எந்த கட்சியும் வரவில்லை. இதனால் தவெக தனித்து போட்டியிடும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கட்சியுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுக, பாஜக கட்சியை கொள்கை எதிரி, அரசியல் எதிரி என கூறி வரும் விஜய், எப்படி பாஜகவுடன் கூட்டணி போட சம்மதித்தார் என தவெக நிர்வாகிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று கட்சியின் பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 120 மாவட்ட…
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட வேலை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் அபரிமிதமான ஆன்மீக சக்திகள், நேர்மறை ஆற்றல் மற்றும் அதன் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தமிழர்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் காந்தா ராவ் நினைவு விருது வழங்கும் விழாவில் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் காந்தா ராவின் திறமையைப் புகழ்ந்து பேசும் போது, அவரது வாள் சண்டை திறமை மற்றும் நடிப்பு குறித்து பாராட்டிய ராஜேந்திர பிரசாத், அதனை ஒப்பிட்டு முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரை குறிப்பிடும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆருக்கே பயம் ஏற்பட்டதாகவும், அதைக் குறிக்கும் வகையில் ஆட்சேபத்திற்குரிய சொற்றொடரை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதும், தமிழ் திரையுலகினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த கருத்தை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். குறிப்பாக…
பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேல்முதலம்பேடு பகுதியில் கடை நடத்தி வந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மூவரும் கஞ்சா போதையில் தான் இந்த வெறிச்செயலை செய்ததாக கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் மதுராந்தகம் அருகில் 14 வயது சிறுமியை இரு மனித மிருகங்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதைத் தொடர்ந்து விளாத்திக்குளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை…
அடுப்பே இல்லாமல் செய்யும் பச்ச புளி ரசம் ரெசிபி; எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
5 ஆரோக்கிய ஜூஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்; பிரகாசமான சருமத்திற்கு உதவும் இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்.
