Author: Prime Reporter

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு Sunrisers Hyderabad அணியில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என்ற செய்திகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அணியின் தற்போதைய கேப்டனான Pat Cummins கிடைப்பது குறித்த அனிச்சைகள் நிலவுவதால், அவருக்குப் பதிலாக Ishan Kishan கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. Pat Cummins கடந்த சில மாதங்களாக சர்வதேச மற்றும் லீக் போட்டிகளில் முழுமையாகச் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, அவர் மிகக் குறைவான போட்டிகளில் மட்டுமே களம் இறங்கியுள்ளார். ஜூலை 2025-இல் West Indies cricket team அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், The Ashes தொடரில் ஒரு போட்டியிலும் மட்டும் பங்கேற்ற அவர், அதன் பின்னர் எந்தப் போட்டியிலும் ஆடியதாக இல்லை. இதனால், அவர் ஐபிஎல் 2026-இல் முழுமையாக கிடைப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்த நிலையில், Ishan…

Read More

ஆதவ் அர்ஜூனா ரஜினிக்கு எதிராக பேசியது பேசுபொருளான நிலையில், விஜய் கண்டித்திருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கூறியுள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவின் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த அவதூறான கருத்துக்கு எழுந்திருக்கிற எதிர்ப்பும், அதற்கு திரு. ரஜினிகாந்த் அவர்களே ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என்கிற கருத்து மூலம் தேர்தலில் நிச்சயம் தவெக தொண்டர்களுக்கு எதிராக ரஜினியும் அவரது ரசிகர்கள் இயங்குவார்கள். அது விஜயின் வாக்கு வங்கியை சிதைக்கும், பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். திரு.விஜய் எல்லா காலகட்டத்திலும் அமைதியாக மௌனம் காப்பது தவறு, குறைந்தபட்சம் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விஜய் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். திரு.ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். தற்பொழுது ஆதவ் அர்ஜுனா ” மாற்றுக் கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டாம்,…

Read More

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது தேர்தல் நடவடிக்கைகளை வேகமெடுத்துள்ளது. கட்சியின் விரிவாக்கம், வலுப்படுத்தல் மற்றும் வாக்காளர்களை அணுகும் முயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் சூழலில், வட சென்னை பகுதிக்குட்பட்ட முக்கியமான பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் தலைவர் விஜய் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த தகவல், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனுடன் இணைந்து, பெரம்பூர் தொகுதியில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர்…

Read More

கஞ்சா போதையில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் விரட்டி தாக்கிய இளைஞர்கள் சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி அருகே கஞ்சா போதைக் கும்பல் இளைஞர்கள் கண்ணில் கண்ட பெண்களை விரட்டித் தாக்கி அவர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காணொளி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மதிகெட்ட இளைஞர்கள் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அத்துமீறி இருப்பது விடியா திமுக ஆட்சி போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து தமிழக இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தின் அப்பா என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு..! இளைஞர் சக்தியை மீட்க, போதைக் கலாச்சாரத்திலிருந்து தமிழக இளைஞர்களை மாற்ற பொன்னான நாளான ஏப்ரல் 23-ல்…

Read More

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Read More

சென்னையின் எம்.ஜி.ஆர் நகரில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியல் தொடர்பான முக்கிய விவாதங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. செய்தியாளர்கள் அவரிடம், “அதிமுகவில் தொகுதி பங்கீடு எப்போது நிறைவு பெறும்?”, “தேர்தல் அறிக்கை தயாராகி விட்டதா?” போன்ற கேள்விகளை எழுப்பினர். இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது இறுதி கட்ட பணிகளில் இருப்பதாகவும், அது மிக விரைவில் முழுமையான வடிவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த முடிவுக்கு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். இந்த ஆலோசனைகள் நிறைவடைந்ததும், எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதற்கான முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் உறுதிபட…

Read More

தெலுங்கு பட விழாவில் “நான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஆர். பார்த்திபன்; சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் மற்றும் ட்ரோல்.

Read More

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, எனது முன்னிலையில், இன்று மாலை 4 மணிக்கு #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. விடியா திமுக அரசின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் மற்றும் மகளிருக்கான பாதுகாப்பையும் இளைஞர்களின் நல்லதொரு எதிர்காலத்தையும் உறுதிசெய்யும் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நம் கழக உடன்பிறப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்…

Read More

தவெக சார்பாக தமிழக அரசை கண்டித்து, ஆதவ் அர்ஜூனா பேசும் போது, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அவருக்கு அடுத்தபடியாக விஜய் தான் உள்ளார். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து ரஜினி அரசியலை விட்டே விலகினார். ஆனால் விஜய்க்கு வலிமை உள்ளது என பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தது. மேலும் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் ரஜினி திடீர் அறிக்கை வெளியிடடுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜூனா என்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்தை தெரிவிததுள்ளார். அவருடைய கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர் ரகுபதி, நண்பர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி என குறிப்பிடட் ரஜினி, காலம் பேசாது ஆனால்…

Read More