Author: Prime Reporter

சூலூர் அருகே தேர்தல் விதிமுறை மீறி பதுக்கி வைத்த சில்வர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Read More

ஆரோக்கியமான கோதுமை தோசை மற்றும் காரசாரமான தக்காளி சட்னி செய்வது எப்படி என்பதை எளிமையாக வீட்டிலேயே கற்றுக்கொள்ளுங்கள் இன்று.

Read More

சட்டமன்ற தேர்தலுக்காக திரள் நிதியை மக்களிடம்பெறப் பேவாதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய…

Read More

விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை நயன்தாராவை வைத்து பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு ஆளும்கட்சி உட்பட கூட்டணி கட்சியினரே சி.வி சண்முகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிககையில், எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, தனது திறமையாலும் கடின உழைப்பால் இன்று ‘சிறந்த நடிகை’ என்ற பெயரை மட்டுமல்லாமல், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் திருமதி.நயன்தாரா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் அதிமுக எம்.பி திரு. சி.வி. சண்முகம் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசுவது அரசியல் அல்ல, அது நாகரிகமின்மையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் கண்ணியத்தை காயப்படுத்தும் பேச்சு, பேசுபவரின் குணநலனையே காட்டுகிறது. அரசியல் மேடை என்பது அவமதிப்பு…

Read More

விளாத்திக்குளம் அருகே உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு தமிழக பாஜக சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டது. உடன் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சித்ரங்கதன் அவர்களும் உடனிருந்தனர். திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்குத் தங்களது குலவிளக்கைப் பலி கொடுத்து விட்டு தவிக்கும் அக்குடும்பத்தாரின் கண்ணீர் முகம் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. குற்றம் நடந்து பல நாட்கள் கடந்து விட்ட போதும்,…

Read More

தமிழ் சினிமாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தனது முன்னணி இடத்தை நிலைநிறுத்தி வரும் நடிகை குறித்து பரபரப்பான தகவல் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட உலகில் தொடர்ந்து பயணித்து வரும் திரிஷா, இன்று வரை முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல தலைமுறை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள அவர், தற்போதும் கதாநாயகி மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள “கருப்பு” திரைப்படம் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தப் படத்தில் பல ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்திருப்பது, ரசிகர்களுக்கு ஒரு முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 42 வயதிலும் முன்னணி நடிகையாகத் திகழும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது அறிமுகம் முதல் இதுவரை சுமார் 75…

Read More

தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள புதிய படங்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் “அரசன்” குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகர் சிலம்பரசன், சமீபத்தில் கமல் ஹாசன் நடித்த “தக் லைப்” திரைப்படத்தில் தனது தோற்றத்தால் பேசப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் “அரசன்” திரைப்படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வடசென்னையின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படம், வடசென்னை படத்தின் காலக்கட்டத்தோடு தொடர்புடைய கதையம்சத்தை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், “அரசன்” திரைப்படம் ஒரு வகையில் அந்த உலகத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் வேகமாக…

Read More

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், புதிய திருப்பங்களும், அதிரடி விளக்கங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாக களம் இறங்குவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றிருந்த விஜய், அங்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முக்கிய தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவிய நிலையில், த.வெ.க. தரப்பில் இருந்து உடனடி மறுப்பு வெளிவந்தது. கூட்டணி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர். இந்நிலையில், பாஜக – த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை…

Read More

அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அமலாக்கத்துறை அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை யாரைக் காப்பாற்ற காலதாமதம் செய்கிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. அரசு எந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் துளியளவு கையூட்டு இன்றி நியாமான முறையில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் உன்னத பணியில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இது போன்ற பெரும் ஊழல் முறைகேட்டில் இன்னும் விசாரணையை தொடங்காமல் மௌனம் சாதிப்பது அதன் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. எனவே லஞ்ச…

Read More

நடிகர் பார்த்திபன் தெலுங்கில் நடித்த உஸ்தாத் பகத் சிங் படம் நாளை மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா என பலர் நடிக்க பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தல் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன், தனது சாதியை வெளிப்படையாக கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக பார்த்திபன் பேசும்போது, நான் நாயுடு பையன், நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது, ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வரும் நிச்சயம் தெலுங்கில் சரளமாக பேசுவேன் என இந்த மூர்த்தி வாக்களிக்கிறான், மூர்த்தி என்னுடைய இயற்பெயர் என கூறினார். இந்த நிலையில் பார்த்திபன் சாதி பெயரை வெளிப்படையாக பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள பார்த்திபன், சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ…

Read More