Author: Prime Reporter
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட மே 17 இயக்கத்தை சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா,இந்தி திணிப்பை எதிர்த்து, ரயில் நிலையத்தில் இந்தி பெயரழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க செயல்பாட்டாளர் தோழர் சிவா திலீபன் எனும் திரு. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாட்டின் மொழி உரிமைக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கும் செய்தி மன வேதனையைத் தருகிறது. தோழர் சிவக்குமார் அவர்களின் தியாகம், தமிழக மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைக்கும்; என்றென்றும் போற்றப்படும்! அவரின் தியாகத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், “தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட மாட்டோம்; அதனை சீரிய அரசியல் போராட்டங்களின் மூலம் நிலைநாட்டுவோம்; இனி, ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக்…
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட மே 17 இயக்கத்தை சேர்ந்த சிவா திலீபன் உயிரிழந்தார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தித் திணிப்பு எதிர்ப்பில் இன்னொரு உயிரை இழந்துள்ளோம் எனும்போது பெரும் வேதனை உண்டாகிறது. மொழித் திணிப்பை எதிர்த்து இரயில் முன் பாய்ந்த மே 17 இயக்கத்தின் அன்புச் சகோதரர் திரு.சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி தன் இன்னுயிரை இழந்துள்ளார். அவரை இழந்துவாடும் மே 17 இயக்கத் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும், மொழி உணர்வாளர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் நினைவும் நம் மொழியும் என்றும் வாழும். கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளின்படி “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்”. உழைப்பின் மூலம் மொழி காப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாளையார் அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் இரண்டு நாள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டு குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
கோவையில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த பெண்களிடமிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் விசாரணை நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தைச் சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது அரசு தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டன. மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என…
கோவை கிணத்துக்கடவு முருகன் கோவில் மலையில் மாணவர்கள் சம்பவம் வீடியோ வைரலாகி சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி விசாரணை கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் குடும்பத்துக்கு அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சி வயப்பட்டு ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திக்கு மகுடம் சூட்டுவோம்; தமிழை மட்டம் தட்டுவோம் என வஞ்சக நோக்குடன் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்லிவருவதும் – என தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்து வருகிறது பாசிச பாஜக. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்காமல் ஒரே மொழியை திணிப்பது அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள…
மருந்து பாட்டில்களை திறந்த பிறகு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்? பாராசிட்டமல், இருமல் சிரப் மற்றும் சொட்டு மருந்துகள் குறித்த மருத்துவரின் முக்கிய அறிவுரைகள் இதோ.
13 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய மர்மபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில் 13 வயதான 6 ஆம் வகுப்பு சிறுமி மீது கடந்த கட்டாயம் ஒரு அசிட் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. நேற்று மதிய நேரத்தில், பள்ளி முடிந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, சைக்கிளில் பயணிக்கையில், ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் அவளை நிறுத்தி, வழி கேட்கும் பாசாங்கு செய்தார். சிறுமி தனது சைக்கிளை நிறுத்திய உடனே, அந்த நபர் திடீரென அவளின் முகத்தில் ஆசிட் திரவத்தை வீசிவிட்டார். இச்சம்பவத்தில், அவளின் முகம் தீக்காயங்களுடன் பலமுறை எரிந்தது, மற்றும் சிறுமி கடும் வலியுடன் அலறினாள். அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுமி தனது தைரியத்தை எடுத்து, அசத்தலாக தனது பள்ளி செல்ல ஓடினாள். பள்ளியில்…
நேபாள சுற்றுலா விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி தம்பதியர் உட்பட மூவர் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
