Author: Prime Reporter
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை நோக்கி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கும் உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. கருத்து சுதந்திரம் நம் உரிமை மட்டுமல்ல. ஆளும் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கடமையும் கூட. அப்படி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களை தொடர்ந்து மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கும் வேலையை தொடர்ந்து இந்த ஆளும் திமுக செய்து வருகிறது. இன்று சிவகங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த செய்தி விவாதத்தின்போது அந்த தொலைக்காட்சியின் நெறியாளர் ராஜேஷ் சகிப்புத்தன்மை துளியும் இல்லாத திமுகவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். தோல்வி பயத்தில் எதிர்கருத்து வைப்பவர்கள் மேல் எல்லாம் வன்முறையை நிகழ்த்தும் ஆளுங்கட்சியின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. திமுகவினரின் இத்தகைய ஆணவத்திற்கு தமிழக மக்கள் தேர்தல் நாளன்று தக்க பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சூலூரில் மயானம் இல்லாததால் 40 ஆண்டுகளாக போராடும் 4000 கிறிஸ்தவ குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளனர்
23 நாட்களில் 50க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது குறித்து வானதி சீனிவசான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 நாட்களில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கான சாட்சி! பொதுவாக தேர்தல் காலம் நெருங்கியதும், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே எந்தவொரு ஆளுங்கட்சியும் விரும்பும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகச் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்காமல் மெத்தனமாக இருந்த திமுக அரசோ, ஆட்சியின் இறுதி நேரத்திலும் தன் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கை மொத்தமாக உருக்குலைத்துள்ளது. இதனால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் பறிக்கப்பட்டு, தமிழக மக்களின் வாழ்வே நரகமாகி வருகிறது. ஆனால், திமுகவோ மீண்டுமொருமுறை ஆட்சியைப் பிடிக்கும் கனவில் மிதந்து வருகிறது. ரோம் பற்றியெறிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, பெண்கள்…
பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் செரிமானக் கோளாறு நீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் உடல் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி இதுதான் என எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், பொம்மை முதல்வராக இருந்த திரு.ஸ்டாலின், அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை! எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள்…
பெரிய வெங்காயம், புளி மற்றும் வரமிளகாய் கொண்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான வறுத்த வெங்காய சட்னி செய்முறையை இங்கே விரிவாகக் காணலாம்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, AIADMK தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் Bharatiya Janata Party, Amma Makkal Munnettra Kazhagam மற்றும் Pattali Makkal Katchi ஆகியவை முக்கிய கூட்டணி கட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகி, அதன் விவரங்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. Amma Makkal Munnettra Kazhagamக்கு 11 தொகுதிகளும், Anbumani Ramadoss தலைமையிலான பாமகவிற்கு 18 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பாஜகவிற்கு இந்தமுறை 7 தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில், கடந்தமுறை 23 தொகுதிகள் பெற்ற பாமகவிற்கு இம்முறை 5…
கோவையில் ‘ஹேப்பிராஜ்’ படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி. பிரகாஷ், தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவன் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்று இயக்குனர் கேந்திரன் பேசினார்.
கோவையில் புதிய முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த நடிகர் சிவகுமார், பெற்றோரை கைவிடுவது பாவம் என்றும், தானும் இங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
