Author: Prime Reporter
சிறுமுகை அருகே பழைய துணிகளைத் தரம் பிரிக்கும்போது கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை, உரியவரிடம் ஒப்படைக்கச் செய்த வியாபாரி செந்தில்குமாரின் நேர்மைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விளம்பர உலகில் தடம் பதிக்கும் நடிகர் அஜித்; பிரபல சர்வதேச குளிர்பான நிறுவனத்துடன் பல கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. 21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சாம்சங் Quick Share அப்டேட் மூலம் iPhone AirDrop ஆதரவு அறிமுகம் செய்யப்பட்டதால் Android iOS இடையிலான கோப்பு பகிர்வு சுலபமாகிறது
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான் என்றும், புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை – நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் என அன்புமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும்…
அளவுக்கு மிஞ்சினால் பன்னீரும் நஞ்சே; செரிமானக் கோளாறு முதல் உடல் எடை அதிகரிப்பு வரை பன்னீர் அதிகம் உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த முழு விவரம்.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்குவதை கேப்டன் ருதுராஜ் உறுதி செய்துள்ளார்; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு.
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து தான் பேசியதாக வெளியான வீடியோவிற்கு விளக்கம் அளித்த சமுத்திரக்கனி, உண்மையை பேச தான் என்றுமே தயங்கியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கோவை தீத்திபாளையம் அருகே டெம்போ மோதி உயிருக்குப் போராடிய தேசியப் பறவையான மயிலை, சமூக ஆர்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.
கோவை சூலூரில் கள்ளக்காதல் தகராறில் ஹோட்டல் தொழிலாளியைக் கொன்ற பிரேமானந்த், சிலிண்டர் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
