Author: Prime Reporter
பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் காரில் அழைத்து சென்று, மற்றொரு நண்பருடன் சேர்ந்து மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், பிரேஸ்லெட், செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.90 ஆயிரத்தையும் ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்த தனுஷ் திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியன் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி தனுசை கைது செய்தனர் . அவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் கோவை ஈச்சனாரி பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில்…
கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் என்ற வாலிபருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். பிறகு செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தினமும் பேசி வந்து உள்ளனர். அப்பொழுது தருண் அந்த இளம் பெண்ணிடம் நாம் நேரில் சந்தித்து பேசலாமா ? என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த இளம் பெண் சம்மதித்ததால் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பேரும் நேரில் சந்தித்தனர். பின்னர்…
கோவையில் சமீபத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த சம்பவம் நடந்த 3 நாட்களில், கோவையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை சிலர் மிரட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து போலீசார் ஆய்வு செய்ததில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது, இருகூர் விவகாரத்தில் வெள்ளை கலர் காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல்துறையினருக்கு 100க்கு தகவல் அளித்துள்ளார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள் அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம் அதில் வாகன எண் தெளிவாக இல்லை. அந்த சிசிடிவி காட்சியில்…
சென்னையில் உள்ள பிரபல நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் அருண் விஜய். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமான அவர், பல படங்களில் நடித்தும் பெரியதாக எந்த படமும் அவருக்கு எடுபடவில்லை. 30 வருடமாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது என்னை அறிந்தால் படம். பின்னர் வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அருண் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் சோதனையில் அது வதந்தி என தெரியவந்துள்ளது. மெயில் மூலம் வந்த மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு திமுக அரசு கூச்சப்பட வேண்டும், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்துள்ளது திமுக அரசு. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த 3வது நாளே அதே கோவையில் பெண் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது என இபிஎஸ் சரமாரி விமர்சனம்
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள சுந்தராபுரம் ரோடு பாரதி காலனியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 28). இவர் மதுக்கரை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். விக்னேஷ் குமாருக்கு திருமணம் ஆகி சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதனால் அவரது மனைவி சரண்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விக்னேஷ் குமார் அவரது பாட்டி சாரதாம்பாள், தந்தை செல்லத்துரை பராமரிப்பில் இருந்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து தினமும் விக்னேஷ் குமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் குமார் குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.…
