Author: Prime Reporter
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் என இருவகைப் பறவைகளுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் வளமிக்க மாநிலமாக திகழ்கிறது. இதன் காரணமாக, பறவைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை, இனப்பல்வகை ஆகியவற்றை கண்காணிப்பது மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. இந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இராட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) செயல்படும் வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி மையம், சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப்பல்வகை நிலவரத்தை துல்லியமாக அறிய மாநில அளவிலான கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக,…
சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் யாசகர்கள் தங்கியிருந்த நிலையில் காலை எழுந்து பார்க்கும் போது அருகில் அடையாளம் தெரியாத பெண் சமலமாக கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் திருச்சி மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பதும், குடும்பத்தை பிரிந்து பொன்னமராவதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில், அதே யாசகர் குழுவில் உள்ள சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச்…
கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை காட்டெருமை சிறுத்தை புலி மற்றும் பல அரிய வகையான வன விலங்குகளும் உள்ளன. மேலும் மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் இன்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்து உள்ளது. அப்போது அங்கு யாரும் வசிக்காத வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை தனது குட்டியை அங்கேயே விட்டுவிட்டு சென்று உள்ளது. இதனை அடுத்து குட்டி சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது கருஞ்சிறுத்தை குட்டி இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அருகில் உள்ள வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அங்கு கூண்டுடன் விரைந்து வந்து குட்டியை மீட்டு கூண்டில் அடைத்தனர் தொடர்ந்து…
. எம்ஜிஆர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது அவர் வாழ்ந்த வரலாற்று நினைவுகளை காண்போம் எம் ஜி ஆர் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். இவர் 1977ம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1960ம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, தன்னுடைய 70வது வயதில் மறைந்தார். மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர், வாத்தியார், இதய தெய்வம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம் ஜி ஆர். மக்களைப்…
பெருந்தலைவர் காமராஜர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு youtuber முக்தார் இழிவாக பேசியதை கண்டித்து பல்வேறு நாடார் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். கோவையில் தொழில் முனைவர் பாதுகாப்பு சங்கம், இந்து நாடார் சேவைகள் சங்கம் மற்றும் கோவை மாநகர் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி அன்று Youtuber முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தற்பொழுது வரை அவர் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு விசாரணை கூட தொடங்கவில்லை என்று மனிதர்கள் குற்றம் சாட்டினர். Youtuber முக்தார் நடவடிக்கை எடுக்க விட்டல் தமிழகம் முழுதும் உள்ள 50 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகர்கள் அரசுக்கு…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றியுள்ளனர். எந்த பார்ப்பனராவது ‘முருகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களா? அவர்கள் முருகனை ‘ஸ்கந்தன்’ என்றே அழைக்கின்றனர். ‘கந்தன்’ என்றாலும் அது தமிழ் பெயராகிவிடும் என்பதால் ‘ஸ்கந்தன்’ என்றுதான் பயன்படுத்துகின்றனர். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிராமண சமூகத்தைச் சேர்ந்த தனது கணவர் பெயர் ‘குமார்’ என்றும், தனது மகன் பெயர் ‘கார்த்திகேயன்’ என்றும் குறிப்பிட்டு, அவை அனைத்தும் முருகன் பெயர்களே என பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த கல்லூரி மாணவி ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்த காவலர் பணியிடை நீக்கம்.கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமத். இவர் பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று விட்டு கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் வந்து வந்தார். இவரது அருகே சென்னையில் சட்ட கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி கோவைக்கு வந்தார். அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அருகே அமர்ந்து இருந்த காவலர் சேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவரை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கி விட்டு விசாரணை நடத்தினர்.…
கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் கைது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கோவை ஆர்எஸ் புரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது
2026 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட பாஜக கோரிக்கை வைத்த நிலையில் 23 தொகுதிகளை ஒதுக்க இபிஎஸ் முடிவு என தகவல்
கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், ‘கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது’ என கூறி, கருப்பு துணிகளால் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்தால், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, சமூக…
