Author: Prime Reporter

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் அரசியலில் குதித்துள்ளதால், தனது ஜனநாயகன் படம்தான் கடைசி என அறிவித்தார். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதனால் நேற்று காலை முதலே ரசிகர்கள் பலர் மலேசியாவுக்கு படை திரண்டனர். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர்களான இயக்குநர்கள் நெல்சன், அட்லீ, லோகேஷ் ஆகியோர் ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியா சென்றுள்ளனர். 🔥 When the HIT-maker arrives, the vibe changes instantly! 🔥Lokesh Kanagaraj at the #JanaNayagan audio launch = pure goosebumps 🐐🎶Silent walk. Loud impact. Mass presence…

Read More

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது வரைவு வாக்காளர் பட்டியலின்படி 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர் இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான ஒரு மாத காலத்திற்கு ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் (Claims and Objectionar)பெறுவதற்கான காலமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது இக்கால கட்டத்தில் 01.01.2026 அன்று 18 வயதினை நிறைவு செய்யும் இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் ஆகியோர் படிவம் 6-லும் வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்தல் முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்திருப்பின் புதியதாக அடையாள அட்டை…

Read More

கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த கோழிகள் மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி தமிழக–கேரள எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல்…

Read More

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கடந்த 53 நாட்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் இலங்கை நீதிமன்றம் இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளது ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த கைது சம்பவம் தொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனையில் இருந்தனர் மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு மீனவர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக இலங்கை நீதிமன்றம் 4 மீனவர்களையும் 53 நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது…

Read More

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் (sports hup) என்ற கடையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு இருந்த பொருட்களை பார்வையிட்டார். பின்னர் ரசீது பதிவு செய்யும் கணினி டேபிள் அருகே வந்து நின்ற பெண் அங்கும், இங்கும் பார்வையிட்டு பின்னர் நைசாக அந்த டேபிளில் இருந்த வாசனை திரவியம் பாட்டிலை எடுத்துக் கொண்டு நைசாக அங்கு இருந்து வெளியே செல்கிறார். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கடை உரிமையாளர் பார்த்தார். அப்பொழுது அந்தப் பெண் உள்ளே இருந்து வாசனை திரவிய பாட்டிலை நைசாக எடுத்துக் கொண்டு காட்சிகளைப் பார்த்த அவர் மேலும் இதேபோன்று பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை…

Read More

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் பள்ளி முடிந்து தனியாக வீடு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து, வாயை பொத்தி மாந்தோப்பில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் தப்பியிருந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீசார் வெகுநாட்களாக தேடிவந்தனர். 9 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் நடந்து 13 நாட்களுக்கு பின்னர் சூலூர் பேட்டை ரயில்நிலையத்தில் வைத்து அசாம் மாநிலத்தை சேர்நத் பிஸ்வகர்மா என்பவனை போலீசார் கைது செய்தனர், இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 1, பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இதுவரை 22முறை குற்றவாளி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சாகும்வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்த 5 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை…

Read More

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் களவு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தடய அறிவியல் நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே நன்றாக பழக்கம் உள்ள நபர்கள் யாராவது இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலிசார் சம்பவ…

Read More

விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சினிமாவில் இருந்து விடை பெறும் விஜய்யின் கடைசி படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். வரும் ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், நாளை மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் விழா வெளிநாடுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஏராளமான திரைப்பிரபலங்கள் மலேசியா ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குநர் நெல்சன், அட்லீ ஆகியோர் மலேசியா புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது போல ரசிகர்கள் பலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியா புறப்பட்டனர். இதனால் சென்னை விமான நிலையம் ஸ்தம்பித்திருந்தது. தற்போது நடிகரும்,…

Read More

பாமகவில் சமீப காலமாக தந்தை மகன் மோதல் அதிகரித்து வருகிறது. பாமகவில் கௌரவ தலைவராக உள்ளவர் ஜிகே மணி. இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் ஜிகே மணியை கட்சியை விட்டு நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். முன்னதாக அன்புமணி கூறும் போது, தந்தை மகன் மோதலுக்கு காரணம் ஜிகே மணி தான் என்றும், தனக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்ததை ஜிகே மணி தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜிகே மணி, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்குவதை ராமதாஸ் எதிர்த்தார். ஆனால் அன்புமணிக்கு நான் உறுதுணையாக இருந்தேன். மேலவை உறுப்பினராக எனக்கு கிடைத்த வாய்ப்பை அன்புமணிக்காக விட்டு கொடுத்தேன். ஆனால் தற்போது அவர் என்னை விமர்சிப்பது வருத்ததமாக உள்ளதாக கூறினார். இதனிடையே பாமகவில் இருந்து ஜிகே மணியை நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சி களங்கம் ஏற்படுத்தியதாகவும், இது குறித்து கடந்த…

Read More

சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு. நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு. படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து…

Read More