Author: Prime Reporter
நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக குதித்துள்ளார். இதனால் தனது சினிமா கேரியரை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்த அவர், ஜனநாயகன் படம் கடைசி படம் என அறிவித்துள்ளார். ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். பல கதாபாத்திரங்கள் படத்தில் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே அடுத்த அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தமாக 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என்றும், நீளமாக படமாக இருந்தாலும் 4 மணி நேரமாக இருந்தாலும் தளபதியை பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 3 மணி நேரம் 6 நிமிடங்களில் கடைசி 20 நிமிடங்கள் விஜய்க்கு TRIBUTE கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகையிடம் ரூ.3 லட்சம் கேட்டு ஆன்லைனில் மிரட்டல் வந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பெரும் கவனம் பெற்றவர். நடிகை, இயக்குனர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்ட அவர், சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது X (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் பெற 3500 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் ரூபாயை கடந்ததாகும். Shocked to be told I must pay $3,500 to retrieve my suspended Instagram account — with no clarity on the…
கோவையில் உள்ள சுங்கச்சாவடியை சுற்றி இரவு நேரங்களில் திருநங்கைகள் உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை புறநகர் பகுதிகளான கணியூர் சுங்கச்சாவடி (Toll Gate) அருகாமையில் இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இவர்கள் அதிக அளவில் நிற்பதால், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், திருநங்கைகளின் அதிகப்படியான நடமாட்டத்தால் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சுங்கச்சாவடி பகுதியில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால், இது கல்லூரி மாணவர்களை தகாத வழிக்கு இட்டுச் செல்லவும், பாலியல் குற்றங்கள் நடக்க வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய படம் எல்லாம் மெகா ஹிட். இவரது அடுத்த படம் தான் பராசக்தி. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவருக்கு 100வது படம் என்பதாலும், சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. ஏற்கனவே வெளியான அடியே அலையே, ரத்னமாலா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது. நமக்கான காலம் என தொடங்கும் இந்த பாடலை கல்யாண் எழுதியுள்ளார். பாடகர்கள் ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் என 3 பேர் இந்த பாடலை பாடியுள்ளனர். மூன்று விதமான குரல்களில் அமைந்துள்ளதால், தனித்துவமான அனுபவம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும படத்தில் உள்ள இசை, தீம் மற்றும் உணர்வுகளை இந்த ஒரே பாடலில் அமைந்துள்ளது. ஒரு…
தற்போதைய சினிமாவில் ரீரிலீஸ் என்றாலே தனி மோகம்தான். அதிக வரவேற்பு உள்ளதால் ரீரிலீஸ் படங்கள் முன்பு வெளியாகும் வசூலை முறியடித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 2004ல் வெளியான கில்லி திரைப்படம் அப்போது வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், விஜய், திரிஷா உள்ளிட்டோருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. இதனால் கடந்த 2024ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 1999ல் வெளியான படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் ரஜினி ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் எந்த படம் அதிக வசூல் என போட்டி போட்டுக் கொண்டு டுவிட்டரில் வசூல் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உண்மையில் எந்த படம் வெற்றி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட…
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் வழி தெரியாமல் நின்று கொண்டு இருந்ததை பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், சேலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை திட்டியதால், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், வேறு எங்கு ? செல்வது என்று தெரியாமல் நின்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு,…
பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார் பிரபாஸ். இவர் பாகுபலி படம் நடித்ததன் மூலம் இந்தியாவில் பிரபலமான ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பான் இந்தியா படங்களாக நடித்து வருவதால் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது ராஜா சாப் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில் கயல் ஆனந்தி இணைந்துள்ளார். குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கயல் ஆனந்தி, தெலுங்கு தேசத்தை பூர்விகமாக கொண்டவர். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஆனந்தி, தற்போது பிரபாஸ் உடன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபாஸ் படத்தில் 3வது நடிகையாக ஆனந்தி இணைந்துள்ளதால், ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்ற தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் காரில் அழைத்து சென்று, மற்றொரு நண்பருடன் சேர்ந்து மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், பிரேஸ்லெட், செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.90 ஆயிரத்தையும் ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போது இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்த தனுஷ் திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியன் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி தனுசை கைது செய்தனர் . அவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் கோவை ஈச்சனாரி பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில்…
கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் என்ற வாலிபருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். பிறகு செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தினமும் பேசி வந்து உள்ளனர். அப்பொழுது தருண் அந்த இளம் பெண்ணிடம் நாம் நேரில் சந்தித்து பேசலாமா ? என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த இளம் பெண் சம்மதித்ததால் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பேரும் நேரில் சந்தித்தனர். பின்னர்…
கோவையில் சமீபத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த சம்பவம் நடந்த 3 நாட்களில், கோவையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை சிலர் மிரட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து போலீசார் ஆய்வு செய்ததில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது, இருகூர் விவகாரத்தில் வெள்ளை கலர் காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல்துறையினருக்கு 100க்கு தகவல் அளித்துள்ளார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள் அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம் அதில் வாகன எண் தெளிவாக இல்லை. அந்த சிசிடிவி காட்சியில்…
