Author: Prime Reporter
வில்லுப்பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி. மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படம் கொடுத்த நடிகை ராணியை தமிழுக்கு அழைத்து வந்தவர் கங்கை அமரன். ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த ராணிக்கு தமிழில் பெரிய வாய்ப்பு அமையவில்லை. நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறினார். ஐட்டம் டான்சராக மாறிய அவருக்கு ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு குவிந்தது. ஜெமினி படத்தில் ஓ போடு பாட்டுக்கு விக்ரமுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த அவர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வந்தார். டீச்சராக தமிழ் மனதில் பதிந்துள்ள ராணி தனது மகளை சினிமாவில் களமிறக்கியுள்ளார். இயக்குநர் பொன்ராம் உருவாக்கும் கொம்பு சீவி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் தார்னிகா. இந்த படத்தில் கேப்டனின் இளையமகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை திணிப்பாக பார்க்காமல், மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் திமுக செய்த துரோகம் , கீழ்தரமான அரசியலை உச்ச நீதிமன்றம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ஆனா எந்த தமிழக செய்தி ஊடகம் பரபரப்பு செய்தி போட்டானா? விவாதம் செய்தானா? இத்தனை ஆண்டுகளில் கிராமத்து பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் மாணவர்கள்…
உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களை பெற்ற தாய் செய்த சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது. பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 35) தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மோனிகா, 2வது திருமணம் செய்து கொண்டார். தனது இருமகன்களுடன் 2வது கணவருடன் மோனிகா வசித்து வந்தார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் மூழ்கிய அவர், ரீல்ஸ் போட ஆரம்பித்தார். மோனிகா ரீல்ஸ்களை பார்த்த போலீஸ்காரர் ராகவேந்திரா மயங்கினார். ஒரு கட்டத்தில் மோனிகாவுடன் பேச வேண்டும் என செல்போன் நம்பரை கேட்டார். மோனிகாவும் நம்பரை ஷேர் செய்ய இருவரும் மணிக்கணிக்கில் பேச ஆரம்பித்தனர். பின்னர் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இது பத்தாது என்று, தான் வசிக்கும் வீட்டிற்கே போலீஸ்காரரை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் மோனிகா. இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட, இவர்களது ரீல்ஸ் வைரலானது. போலீஸ்காரரான ராகவேந்திராவுக்கு…
ஐதராபாத்தில் உள்ள ஒரு காய்கறிக் கடையில் நடைபெற்ற அநாகரீகமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்தக் கடையின் உரிமையாளர், பொதுமக்கள் கண் முன்னே தனது அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்து, அதே கைகளால் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கையை கூட கழுவாமல் சுகாதாரமற்ற செயலைக் கண்ட அப்பகுதி மக்கள், சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். Mohammed Wasiq was cleaning his private parts and started selling vegetables with same hand in Hyderabad. Locals took video and Complained to police.Shop removed, Mohammed is arrested. pic.twitter.com/uxTCD1BXgV— Telangana Maata (@TelanganaMaata) December 15, 2025 புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அந்தக் காய்கறிக் கடையை அகற்றியதுடன், அநாகரீக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் கடைக்காரரை கைது செய்து விசாரணை நடத்தி…
நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக குதித்துள்ளார். இதனால் தனது சினிமா கேரியரை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்த அவர், ஜனநாயகன் படம் கடைசி படம் என அறிவித்துள்ளார். ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். பல கதாபாத்திரங்கள் படத்தில் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே அடுத்த அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தமாக 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என்றும், நீளமாக படமாக இருந்தாலும் 4 மணி நேரமாக இருந்தாலும் தளபதியை பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 3 மணி நேரம் 6 நிமிடங்களில் கடைசி 20 நிமிடங்கள் விஜய்க்கு TRIBUTE கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகையிடம் ரூ.3 லட்சம் கேட்டு ஆன்லைனில் மிரட்டல் வந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பெரும் கவனம் பெற்றவர். நடிகை, இயக்குனர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்ட அவர், சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது X (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீண்டும் பெற 3500 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் ரூபாயை கடந்ததாகும். Shocked to be told I must pay $3,500 to retrieve my suspended Instagram account — with no clarity on the…
கோவையில் உள்ள சுங்கச்சாவடியை சுற்றி இரவு நேரங்களில் திருநங்கைகள் உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை புறநகர் பகுதிகளான கணியூர் சுங்கச்சாவடி (Toll Gate) அருகாமையில் இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே இவர்கள் அதிக அளவில் நிற்பதால், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், திருநங்கைகளின் அதிகப்படியான நடமாட்டத்தால் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சுங்கச்சாவடி பகுதியில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால், இது கல்லூரி மாணவர்களை தகாத வழிக்கு இட்டுச் செல்லவும், பாலியல் குற்றங்கள் நடக்க வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய படம் எல்லாம் மெகா ஹிட். இவரது அடுத்த படம் தான் பராசக்தி. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவருக்கு 100வது படம் என்பதாலும், சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. ஏற்கனவே வெளியான அடியே அலையே, ரத்னமாலா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது. நமக்கான காலம் என தொடங்கும் இந்த பாடலை கல்யாண் எழுதியுள்ளார். பாடகர்கள் ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் என 3 பேர் இந்த பாடலை பாடியுள்ளனர். மூன்று விதமான குரல்களில் அமைந்துள்ளதால், தனித்துவமான அனுபவம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும படத்தில் உள்ள இசை, தீம் மற்றும் உணர்வுகளை இந்த ஒரே பாடலில் அமைந்துள்ளது. ஒரு…
தற்போதைய சினிமாவில் ரீரிலீஸ் என்றாலே தனி மோகம்தான். அதிக வரவேற்பு உள்ளதால் ரீரிலீஸ் படங்கள் முன்பு வெளியாகும் வசூலை முறியடித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 2004ல் வெளியான கில்லி திரைப்படம் அப்போது வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், விஜய், திரிஷா உள்ளிட்டோருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. இதனால் கடந்த 2024ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 1999ல் வெளியான படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் ரஜினி ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் எந்த படம் அதிக வசூல் என போட்டி போட்டுக் கொண்டு டுவிட்டரில் வசூல் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உண்மையில் எந்த படம் வெற்றி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட…
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து வாகனம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் வழி தெரியாமல் நின்று கொண்டு இருந்ததை பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், சேலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தந்தை திட்டியதால், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், வேறு எங்கு ? செல்வது என்று தெரியாமல் நின்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு,…
