Author: Prime Reporter
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்; “உங்கள் சகோதரனாகப் பணியாற்றுவேன்” என உருக்கமான உறுதிமொழி.
கோவையில் வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆடிஷனில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு; மே 3ஆம் தேதி பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடத் தயாராகியுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான Piyush Goyal சென்னை வர உள்ளார். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. AIADMK மற்றும் DMK ஆகியவை ஏற்கனவே தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக பட்டியல் வெளியாகாதது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில், இன்று மாலை சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் மையக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ள பியூஷ் கோயல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம்…
64 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை! பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி அருகே திமுக கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியின் 11-ஆம் வார்டு உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித் குமார் நேற்றிரவு திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது. ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஆட்சியில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை. சில வாரங்களுக்கு முன் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட…
நெல்லையில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது தொகுதியை மாற்றியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜக தலைவர் Nainar Nagendran விளக்கம் அளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் Piyush Goyal சென்னை வருகை தந்தவுடன், இன்று மாலை பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, “நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திருநெல்வேலியின் மகன் தான். என் வாழ்நாள் முழுவதும் அந்த மக்களை மறக்க முடியாது. பலமுறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் எனக்கு உள்ளது. இந்த முறை கூட்டணி கணக்கில், அந்த தொகுதியை AIADMK-க்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டோம். அதனால் அவர்கள் அங்கு போட்டியிடுகின்றனர். அதேபோல், அவர்கள் முன்பு போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் நான் களமிறங்குகிறேன்,” என கூறினார். எனக்கும் ஆசையா இருக்கு.. தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த மன்சூர் அலிகனால் பரபரப்பு!…
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி; 15 பந்துகளில் அரைசதம் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஸ்பெயின் வான்பரப்பை மூட உத்தரவு; “யாருடைய உதவியும் தேவையில்லை” என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆவேசமான பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் சிப் கனவு நனவானது! குஜராத் சனந்தில் ₹3,300 கோடி மதிப்பிலான கெய்ன்ஸ் செமிகான் செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
தண்டாவளத்தில் தலையை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனதா கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லால்குடி தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்தது. கல்லக்குடி ரெயில் நிலைய தண்டவாளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருகாலத்தில் போராட்டத்தின் ஒரு பகுதியாக படுத்திருந்த இடத்தில், மன்சூர் அலிகான் சில நிமிடங்கள் படுத்திருந்தார். துக்கம் தாளாமல் சென்னை அணி ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா.. வைரலாகும் வீடியோ! இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்லக்குடி ரெயில் நிலையம் ஒரு வரலாற்றுச் சின்னம். முத்தமிழறிஞர் கலைஞர் படுத்திருந்த அந்த…
