Author: Prime Reporter
கரூரில் பிரபல தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நடிகை ராணி, பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்துள்ள அவருக்கு பாலாஜி என்கிற பாலமுருகன் என்கிற கணவர் உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்துள்ளார். ரூ.10 லட்சம் குத்தகைக்கு பேரம் பேசிய நிலையில் பணம் இன்னும் தரவில்லை. கடந்த மாதம் கரூர் வந்த பாலாஜி, விடுதி உரிமையாளரான நாமக்கல்லை சேர்ந்த தினேஷிடம், உங்களுடை சொகுசு கார் என் மனைவிக்கு பிடித்துள்ளது, இரண்டு நாள் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறியுள்ளார். உடனே உரிமையாளரும், எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் காருக்குள் 5 சவரன் வைரத் தோடு இருந்துள்ளது. இதையடுத்து பாலாஜிக்கு போன் செய்து, காருக்குள் இருக்கும் வைர நகைகள் மனைவியுடையது. நகை மற்றும்…
பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விட தற்போது சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் சிறந்த எடுத்துக்காட்டு. எண்ணற்ற படங்கள் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்து போகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான படம் சிறை. விக்ரம் பிரபு நடிக்க, சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்த சிறை படம் ஏராளமான ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சிறை படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பாராட்டியது மட்டுமல்லாமல், பெரிய பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இது உண்மையிலேயே ஒரு சிறந்த படம். பல இடங்களில் கண்கலங்கச் செய்தது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, படம் முடிந்த பிறகும் மனதில் நிலைத்திருக்கின்றன. #Sirai- Such a good film.…
கோவையில் 9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி…
வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் இந்த காலத்தில் சின்னத்திரையை தான் நம்பி வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரையில் பிரபலமானால் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது இந்த காலத்தில் சுலபமானது தான். அப்படித்தான் நமக்கும் கிடைக்கும் என ஏராளமான நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரை மூலம் பிரபலமாக முயற்சி செய்கின்றனர். அப்படி வந்தவர் தான் சீரியல் நடிகை நந்தினி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நந்தினி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கன்னட சீரியலிலும் நடித்து வந்தார். தமிழில் கௌரி சீரியல் வாய்ப்பு கிடைத்ததும் மிக மகிழ்ச்சியடைந்த அவர், சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கனகா, துர்கா என இரு வேடங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். பெங்களூருவில் கௌரி சீரியல் படப்பிடிப்பு நடந்தது வந்தது. பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்த நந்தினி, சின்ன பிரேக் எடுத்துக்கொள்வதாக பெங்களூருவுக்கு சென்றார்.…
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த டிச.20 ஆம் தேதி திருமொழி திருநாள் தொடக்கம் எனப்படும் பகல்பத்து உற்சவத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து அரங்கநாத பெருமானுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகளும்,அலங்காரம் செய்யப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து நேற்றிரவு அரங்கநாத பெருமான் ஸ்ரீ நாச்சியார் (மோகனாவதாரம்) திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 5:45 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக 4 மணியளவில் மூலவர் அரங்கநாத பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் ஆண்டாள் சன்னதி அருகே எழுந்தருளினார். தொடர்ந்து புண்ணியாக வாசனம், வேத பாராயணம் உள்ளிட்டவை முடிந்து சரியாக காலை 5.55 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நம்மாழ்வார்,…
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்துக்கு எட்டியுள்ளது. 80 நாட்களுக்கு மேலாக ஆன நிலையில் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் ஏராளமான போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி, தற்போது சொற்ப போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடந்தது. முதலில் அமீத் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் யாருமே எதிர்பாரா வகையில் கனித்திரு வெளியேற்றப்பட்டார். இது அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. அபாய கட்டத்தில் கனி மற்றும் சாண்ட்ரா இருந்தாலும், அனைவரும் சாண்ட்ராவை தான் வெளியேற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கனி வெளியேற்றப்பட்டது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய கனி, முதல்முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இத்தனை நாளாக எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டாலும் ஒரு நாள் முழுக்க தனிமையில் தான் வைத்திருப்பார்கள். இது எல்லோருக்கும் தெரியும், அப்போது எனக்குள் எழுந்த கேள்வி, என்னை ஏன் மக்கள் வெளியேத்துனாங்க, என்னை…
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 10 கைது செய்து வேனில் அழைத்து சென்ற போது போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது, தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவது போன்று பேருந்துகளில் மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதி இயக்கப்பட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி பேருந்து நிலையத்திற்கு , நாம் தமிழர் கட்சியின் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, அரசு பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஓட்டி திமுக, அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.…
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கருத்தியல் ரீதியாக இரு துருவங்களாக செயல்பட்டு வந்தாலும், அக்கட்சிகளின் பெண் தலைவர்கள் இன்று காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது. சென்னையில் இருந்து கோவை வந்த ஒரே விமானத்தில் கனிமொழி எம்.பி மற்றும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இன்று தி.மு.க திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் நடைபெறும் நாளை வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் வந்தனர்.பா.ஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நடத்தி வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக மலுமிச்சம்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் ஆளுநர் தமிழிசை…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்ற சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இவ்விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.போக்குவரத்து கட்டண உயர்வை குறித்து பேசுகையில், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் மூண்மடங்கு உயர்ந்து உள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழியர் நலன் உள்பட அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்து…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் மேற்கு மண்டல அணி சார்பில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த முதல்வருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகர காவல் ஆணையர் கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை சார்ந்த திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி மேற்கு மண்டல திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை சளைகளில் இரு புறமும் தொண்டர்கள் மற்றும் மக்களும் தமிழக முதல்வருக்கு மேளதளங்களுடன் உற்சாக வரையிற்பனைக்கப்பட்டது. இன்று மாலை பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள…
