Author: Prime Reporter

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தமிழக கட்சி கழகம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் வைகைச்செல்வன் தங்களைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வைகைச் செல்வனுக்கு சீட்டும் தரவில்லை அவர் ஜெயிக்கவும் இல்லை அதனால் அவருக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் யார் யாருக்கு கருத்து சொல்ல வேண்டும் என தகுதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் பல பேர் இணைய போவதாகவும் அதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்து சென்றார்.

Read More

சின்னத்திரையில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் அறிமுகமாக மதராஸி வரை பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நாளை வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பராசக்தி படத்திற்கான பிரமோஷன் பட்டையை கிளப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும், குடும்பத்தோடு செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித், மாதவன் போன்ற நடிகர்கள் துபாயில் வீடு வாங்கியுள்ள நிலையில், அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

Read More

அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படம் தான் கடைசி என அறிவித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், சாதகமான தீர்ப்பு வராததால் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்தது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் அரசியல் நுழைவே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விஜய்யின் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட உள்ளதால் தான், இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக பரவலான கருத்துக்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் மெர்சல் பட ரிலீசின் போதே பிரச்சனை ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம், அது போலவே தற்போது ஜனநாயகனுக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.…

Read More

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. கடைசி படம் என்பதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ரிலீஸ் தேதி அறிவித்த பின், வியாபாரம் படுஜோராக போனது. ஆனால் திடீரென சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் போனது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம், படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை. இதனால் படத்தின் ரீலிசை தள்ளிப்போடுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ஜனநாயகன் ப்ரீ புக்கிங் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் எனவும் கூறப்படுகிறது. கடைசி ஒருமுறை விஜய்யை திரையில் பார்க்கலாம் என தளபதியின் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தற்போது படம் ரிலீஸ் தள்ளிப்போனது மிகப்பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ஜனநாயகன் ரூ.65 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நாளை படம் ரிலீஸ் ஆகாது என்பதால் இனி வசூல் எப்படி இருக்கும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த விமல் ராஜ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களான முரளி மற்றும் ஆகாஷ் காரில் திருமலையாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது தனியார் இரும்பு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த இரும்பு குழாயில் கார் அதிவேகமாக வந்து மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காரை ஓட்டிய ஆகாஷ் மற்றும் காரின் பின்னால் இருந்த முரளி ஆகியோர் காரில் இருந்து இறங்கி தப்பினர். இடது பக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் வெளியே வர முடியாமல் தீப்பிடித்த காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்பிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவுகட்டும் வகையில் திமுக செயல்படுகிறது எனப் பேசியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்” பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் திமுக அரசு ஈடுபட்டது. இதை விடவா, திமுக அரசின் இந்து விரோதப் போக்கிற்கு உதாரணம் வேண்டும்? இந்து கோயில்களின் கும்பாபிஷேகத்திற்கு திமுகவோ, திமுக அரசோ நிதி தரவில்லை. முழுக்க முழுக்க இந்து பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் மட்டுமே கோயில் கும்பாபிஷேகம்…

Read More

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீரம்பாளையம் பகுதியில் இன்று தமிழக கட்சி கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னதாக தமிழக கட்சி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் அலுவலகத்தை திறந்து வைத்து அலுவலகத்தில் வைத்திருந்த காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் வேலுநாச்சியார் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக கட்சி கழகம் இப்போது வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் இன்று காலை அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதாக கருத்துக்கள் வரப்பெற்றன. இதை செய்தி வாயிலாக அறிந்தேன் என தெரிவித்த அவர் புடிச்சிருந்து பாருங்கள் எந்த வேகத்தில் தமிழக வெற்றி கழகம் வீரநடை போடுகிறது என்பதை காலம் பதில் சொல்லும் எனவும் தெரிவித்த அவர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த…

Read More

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்வே நம்பர் பகுதியில் வசித்து வந்தவர் கோபாலகிருஷன் (வயது 45). இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து இறந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் மனோஜ்குமார் என்பவர் தந்தை இல்லாத நிலையில் தாய் பரமேஸ்வரி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனோஜ் குமார் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாயான பரமேஸ்வரியை பார்க்க கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வந்துள்ளார். மேலும் கோபாலகிருஷ்ணன் பாரமேஸ்வரிடம் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரி வீட்டிற்கு சென்ற நிலையில், பரமேஸ்வரியிடம் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார், மேலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு வந்த மனோஜ் குமார் , தனது தாயை அடிக்க சென்ற கோபாலகிருஷ்ணனை…

Read More

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை கண்டித்து கோவை காந்திபுரம் சிக்னல் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர்…

Read More

கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் அதனை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். சில MP, MLA களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் அதே வேளையில் ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளி விடுவார்களா என்றும் கேள்வி எழுப்பினார். கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும் எனவும் எங்களுடையது ஜனநாயக கட்சி என்பதால் யார் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் நான் சினிமாவில் இல்லை அதை தெளிவுப் படுத்திக் கொள்கிறேன் என்றும் தவெக தலைவர் விஜயை சந்தித்தேன் அதை தாண்டி எதுவும் கூற விரும்பவில்லை என கூறினார். ,விஜயை சந்தித்தது போல டெல்லியில் பலரையும் நான் சந்திக்கிறேன் பிரவீன் சக்கரவர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது மட்டும்தான் அடையாளமா..? வேறு அடையாளங்களே இல்லையா… ? தனிப்பட்ட…

Read More