Author: Prime Reporter
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்துள்ளார். அவரது கடைசி படமான ஜனநாயகன், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் பிரச்சனையால் படத்திற்கு தடை தொடர்ந்து கொண்டே வருவதால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கியிருந்த நிலையில், 2 ஆண்டுகள் முடிந்து 3ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. Vibe with Thalapathy @TVKVijayHQ 🕺🏽 pic.twitter.com/OZBdWT3GgB— Vijay Fans Trends (@VijayFansTrends) February 2, 2026 இன்று நடந்த 3ஆம் ஆண்டு துவக்க விழாவில், கட்சியினர் மத்தியில் விஜய் அனல் பறக்க பேசினார். அதில் ஒரு பகுதியாக, பாடகர் வேல்முருகன் பாடலை பாடினார். மேலும் விஜய்யை நடனமாட வேண்டும் என வேண்டுகோள் வைக்க, விஜய் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியக்களில்…
இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் இருந்து பட்டத்தை வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வரிசையில் நின்றிருந்த மாணவர், ஆளுநர் பட்டம் வழங்கும் போது, முதல்வர் படத்தை இணைத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தொடர்ந்து வந்த மாணவர்கள் சோதனைக்கு பிறகே மேடையேற்றப்பட்டனர். ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மாணவி மறுத்திருந்த சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலியே மயங்கி கிடந்தவர்கள், பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள் மேலும் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னராக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, உடன்பாடும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ஹவுசிங் போர்டு காலனி அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராஜ்குமார் (43), சுரேஷ் (24) மற்றும் சந்துரு (23) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் டாப் 10 இடங்களில் எப்போதும் இருக்கும் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் சிறகடிக்க ஆசை. டிஆர்பி ரேட்டிங்கில் நிச்சயம் 10 இடங்களுக்குள் வந்துவிடும். பூ விற்கும் பெண்ணான மீனா, கௌரவமான குடும்பத்தில் குடிகாரனாக இருக்கும் முத்துவுக்கு மனைவியாக செல்கிறார். பிறகு முத்துவை எப்படி திருத்துகிறார், கூட்டுக்குடும்பமாக உள்ள கணவரின் குடும்பத்தை எப்படி கவனிக்கிறார், பணக்கார திமிர் பிடித்த மாமியாரின் கொட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே கதை. சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அப்பாவி மீனாவாக வலம் வருபவர் நடிகை கோமதி பிரியா. இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த கோமதி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவேற்றுவது வழக்கம். ஆனால் இந்த முறை புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸ் என வித்தியாசமாக மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னது இது சிறகடிக்க ஆசை மீனாவா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே. தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் திரு ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு. தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப்…
2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பல நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் தேர்வாகினர். விருது பட்டியலில் தனுஷ், விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களாகவும், ஜோதிகா, நயன்தாரா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜூமோல், சாய் பல்லவி சிறந்த நடிகர்களாக தேர்வாகினர். விருது பட்டியல் குறித்து விவாதங்கள் பல எழுந்தன. விருதுக்கு தேர்வான கலைஞர்கள் பலர், தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். ஆனால் தேர்வாக திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், திரையுலகினர் பலர் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். சமூகத்திற்காக நல்ல கதை சொன்ன படங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விமர்சன ரீதியாக, கலை ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படங்கள், கலைஞர்களுக்கு விருது கிடைக்காதது சரியா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது…
நேற்று முத்துக்குமர் நினைவு தின கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தும் போது, ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலியே மயங்கி கிடந்தவர்கள், பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள் என கூறினார். மேலும் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னராக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, உடன்பாடும் இல்லை என கூறியிருந்தார். இந்த நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவல், ஊழல் நிறைந்த, இந்து விரோத திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் தொடர்ந்து பாஜகவும் சங்கப் பரிவாரமும் காரணம் என குற்றம் சாட்டி வந்த I.N.D.I. கூட்டணி எம்.பி.…
தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்களே உள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் என 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பம்பரம் போல தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விவாத நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ…
நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் மனதை கவர்ந்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பெயரும் உண்டு. ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி, ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார். தற்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, காயமடைந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பூரண குணமடைய வேண்டும் என சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி காயமடைந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டும்பரவி வருவதால் இது எந்தளவு உண்மையென தெரியவில்லை.
