Author: Prime Reporter

கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 அல்லது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ – 2026-ன் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் எது? ஆடியோ தரம் மற்றும் வசதிகள் குறித்த விரிவான ஒப்பீடு.

Read More

தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு மக்களிடையே பெருகி வரும் பேராதரவைக் கண்டு திட்டமிட்டே தவெக மீது அறிவாலய வட்டாரம் சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில்…

Read More

கேரவனுக்குள் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் இருந்து என நடிகையின் புகாரையடுத்து பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த புகாரில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் தன்னை தனியாக ஒரு கேரவனுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து திங்கள்கிழமை கொச்சி நகர காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் இருந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தொடுபுழாவில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைக்காக அவரை விரைவில் கொச்சி நகர காவல்துறையிடம்…

Read More

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய மாற்றம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த மாணிக்கம் தாகூர் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு, திமுக கூட்டணிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி நிலையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வந்தார். அதோடு, மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்! இந்த விவகாரம் தொடர்பாக, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.…

Read More

2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது அதன் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பூவே உனக்காக படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சங்கீதா, இந்தப் படத்தில் முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பரத் தனது திரையுலக பயணத்தைப் பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “எதுவும் சாதிக்காமல் இருந்தவர்களே சில நேரங்களில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள் என்று…

Read More

பங்குனி உத்திரம் 2026: திருமணத் தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் மங்கள நாள். விரத முறைகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் குறித்த முழு விவரம்.

Read More

விஜய்யை பற்றி விமர்சனம் வைக்கவே மாட்டேன் என இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் கூறியுள்ளது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

அமெரிக்காவின் கூகுள், மெட்டா உள்ளிட்ட 15 முன்னணி நிறுவனங்களுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரிப்பு.

Read More

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது கழகத் தலைவர் அவர்கள் கொளத்தூர் பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்றபோது சென்னை மாநகர காவல்துறையின் ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் முறைப்படுத்துதல் போன்ற பணி முற்றிலும் முடங்கியது. இதனால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் பிரசாரத்தைப் பாதியிலேயே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. நேற்று, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தபோது, திமுக-வால் ஏவப்பட்ட குண்டர்கள் பாட்டில்களை உடைத்து பெண்கள் மீது வீசி அச்சுறுத்தும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டார்கள். குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..! பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதுபோன்ற ரவுடியிச அச்சுறுத்தல்கள் நடைபெறும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்ததா? காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கைது செய்த நிலையில், அவர்கள் எதற்காக இதனைச் செய்தார்கள்? அவர்களைத் தூண்டிவிட்டவர்கள்…

Read More