Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தங்க வியாபாரியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த துணிகரச் சம்பவம்..!
    கோவை

    தங்க வியாபாரியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த துணிகரச் சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    theft utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த 56 வயதான லட்சுமணன் என்பவர் தங்கம் தொடர்பான வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை 200 கிராம் தங்கக் கட்டிகளை விற்றுவிட்டு, அதற்குக் கிடைத்த 41 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் (KL 55 P 6376) கேரளா நோக்கிப் பயணம் செய்துள்ளார்.

    காலை 8.30 மணியளவில் கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், கே ஜி சாவடி எல்லைக்குட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியைக் கடந்து 200 மீட்டர் தொலைவில் லட்சுமணன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை ஒரு சில்வர் கிரே நிற ஸ்விப்ட் கார் (KL 55 T 5506) பின் தொடர்ந்து வந்துள்ளது.

    திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துக் கீழே தள்ளியது. அதிர்ச்சியடைந்த லட்சுமணனை அந்த மர்ம கும்பல் பலவந்தமாகக் காரில் கடத்திச் சென்றது. மேலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் அந்த கும்பல் கையோடு எடுத்துச் சென்றது.

    அந்த இருசக்கர வாகனத்தின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 லட்சம் ரூபாய் பணத்தை அந்தக் கும்பல் பறித்துக்கொண்டது. பின்னர், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனாம்பாறை என்ற இடத்தில் லட்சுமணனை காரில் இருந்து கீழே இறக்கிவிட்ட கொள்ளையர்கள், அவரிடமிருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பாதிக்கப்பட்ட லட்சுமணன் இதுகுறித்து, கே ஜி சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை (KL 55 T 5506) வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் நடந்த இந்தக் கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    41 lakh robbery Breaking crime news Crime news Tamil Nadu Gold trader kidnap கொள்ளை சம்பவம் தங்க வியாபாரி கடத்தல் போலீஸ் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    April 3, 2026

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    April 2, 2026

    நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.