சளி தொல்லையால் அவதியா? சுலபமாக வீட்டில் செய்யலாம் பூண்டு பருப்பு ரசம்.
பொதுவாக குளிர்காலங்களில் விட்டுவிட்டு சிலருக்கு சளி தொந்தரவு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மாத்திரை மருந்தை எடுத்தும் சரியாகாமல் அவதிப்பட்டு வருவார்கள். அவர்கள் இந்த ரசத்தை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி தொந்தரவு நிச்சயம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு…
1/4 கப் துவரம் பருப்பு
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
3/4 கப் தண்ணீர்
பிற பொருட்கள்…
1 கப் புளி தண்ணீர்
1 பெரிய தக்காளி
உப்பு தேவைக்கு
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் ரசப் பொடி
அரைப்பதற்கு…
1 டீஸ்பூன் மிளகு
1/2 டீஸ்பூன் சீரகம்
1/4 டீஸ்பூன் ஓமம்
4 வெந்தயம்
4 பூண்டு
தாளிப்பதற்கு…
1 டேபிள் ஸ்பூன் நெய்
1/2 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
1/4 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை

Step 1:முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பை கழுவி அதனுடன் மஞ்சத்தூள், நல்லெண்ணெய் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்து கொள்ள வேண்டும்.
Step 2:இடி உரலில் அல்லது மிக்ஸியில் மிளகு, சீரகம், ஓமம், வெந்தயம், பூண்டு ஆகியவற்ற சேர்த்து நான்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
Step 3:நறுக்கிய பெரிய தக்காளி சுவைக்கு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து கைகளால் நன்கு தக்காளி மென்மையாகும் வரை பிசைந்து விட வேண்டும்.
Step 4:பின்னர் ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
Step 5:பின்னர் அதில் இஞ்சி பேசிடை சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள்.
Step 6:அரைத்த அல்லது இடித்த மசாலாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாறு மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளற வேண்டும்.
Step 7:கொதி வந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பூண்டு பருப்பு ரசம் தயார்.

