2016ல் திமுகவுடன் தேமுதிக கூட்டணி போடும் என கருணாநிதி ஓபனாகவே கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, பிரேமலதா தலைமையிலான தேமுதிக கூட்டடணி அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இந்த நிலையில், முதன்முறையாக 2026 தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விஜயகாந்த் avl கலைஞரை எதிர்த்து தேமுதிகவை தொடங்கி தேர்தலை சந்தித்தபொழுது அவருக்காக வாக்கு சேகரித்தவள் நான்.

மண்டபத்தை இடித்தவர்களுடன் கூட்டணி வைத்து கேப்டனின் கனவை இடித்துவிட்டார்கள். விஜயபிரபாகரன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்வாரா? பிரேமலதாம்மா தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்.

