தக்காளி தொக்கு செய்வது எப்படி?
தக்காளி தொக்கு பொதுவாக இந்தியர்களின் மிகப் பிரபலமான உணவாகும். அதனை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இந்த ஸ்டைலில் தக்காளி தொக்கு செய்தால் தட்டில் ஒரு அரிசி கூட இருக்காது தட்டு காலி ஆகிடும். எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கிலோ தக்காளி
- 2 வெங்காயம்
- 1 இன்ச் இஞ்சி
- 10 பற்கள் பூண்டு
- 4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லித்தூள்
- 1 டீஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம்
- 1 கொத்து கருவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:
Step 1) முதலில் அனைத்து தக்காளியையும் தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Step 2) இப்போது கடாயை அடுப்பில் வைக்கவும். (மண்சட்டியில் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்) அதில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
Step 3) பிறகு நறுக்கிய வெங்காயம். இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
Step 4) வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும். நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
Step 5) பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தொக்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்க வேண்டும்.
தக்காளி தொக்கு ரெடி அவ்வளவுதான் சுவையான ருசியான மனத்துடன் தக்காளி தொக்கு ரெடியாகிவிட்டது. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற உணவுகளுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

