ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் இருவருக்குமே ஏற்படும் பொதுவான பிரச்சனை சரும பாதிப்பு. உங்க முகம் தொடர்ச்சியாக முகப்பருவுடன், மந்தநிலையில் இருக்குன்னா இந்த ஃபேஸ் பேக் நீங்க ட்ரை பண்ணலாம்.
கடலை மாவு சருமத்திற்கு அளிக்கும் குறிப்பிட்ட நன்மைகளில் ஒன்று. சருமத்தை வெள்ளையாக்குவதும், பழுப்பு நிறத்தை நீக்குவதும். சருமத்தை வெண்மையாக்கும் ஃபேஸ் பேக்களில் கடலை மாவு தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தை பளபளப்பாகவும், இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.

இது ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு கொடுக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அவை பருக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புதிய பருக்கள் உருவாகாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முகத்தில் கடலை மாவு பூசுவது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சி சருமத்தில் உள்ள துளைகளை சுத்தமாக வைத்திருக்கும். மேலும், பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

- கரும்புள்ளிகளை நீக்குகிறது.
- சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குகிறது.
- இளமையான பளபளப்பை உங்கள் சருமத்திற்கு கொடுக்கிறது.
- சருமத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது.
- சருமத்தை சுத்தமாகவும் சுத்திகரிக்கவும் வைக்கிறது.

