பாகுபலி படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரம்மாண்ட வில்லன் தோற்றத்தில பாகுபலி படத்தில் நடித்தவர் ராணா டகுபதி. 6.2 அடி உயரம் கொண்டு மிரட்டலான லுக்குடன் இருந்து நடிகர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் மாறிவிட்டார்.
120 கிலோ எடையில் இருந்த அவர் தற்போது மெலிந்த நிலையில் இருக்கும் போட்டோ வெளியானதால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதட்டமாகினர்.

இது குறித்து பேசிய ராணா, பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு தனக்கு சிறுநீரகம் செயலிழந்ததாகவும், இதயப் பிரச்சனையை சந்தித்தாகவும் கூறியுள்ளார்- இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றதால், பல படங்களில் நடிக்க முடியாமல் போனதாகவும் தேவனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒப்பந்தமான படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தாகவும், அந்த நேரத்தில தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தமுடியவில்லை.

உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்ததாகவும், அமெரிக்க மருத்துவர்களால் சிகிச்சை முடித்து தோற்றமே மாறி வேறு லுக்கில் இந்தியா வந்ததாகவும் கூறினார்.

