இந்தியா கூட்டணியை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினிடம் திறமை உள்ளது, கடந்த சில நாட்களாக கூட்டாட்சி தத்துவத்தை பற்றி பேசுவது வலுசேர்ப்பதாக உள்ளது. ராகுல் காந்தி பிரதமராக உறுதுணையாக ஸ்டாலின் தான் இருக்க முடியும் என பேசினார்.
அதே போல இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் தலைமையை ஏற்று நடத்த சிறந்தவர் என முன்மொழிந்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய அவர், இந்தியா கூட்டணியில் வலுவாக இருப்பது திமுக மட்டும்தான்.
40 எம்பிக்களை கொண்ட திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளதால், வலுவாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு வலு இல்லை.
எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தான் சரியான நபர். ஒரு வேளை இந்தியா கூட்டணியில் இருந்து ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி ன்பது வெறும் எழுத்தில் மட்டுமே இருக்கும்.

ஏற்கனவே கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறிவிட்டார். அதே போல அந்த கூட்டணியில் சிலர் இருந்தாலும் தனித்தே தான் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் ஸ்டாலினும் வெளியே போனால் இந்தியா கூட்டணி எங்கே இருக்கும்?
எனவே ஸ்டாலின் இருப்பதால் தான் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. அவர் இருப்பதால்தான் அந்த கூட்டணிக்கே வலிமை என சீமான் ஓபனாக பேசியுள்ளார்.

