ICC Men’s T20 World Cup தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், “பி” பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததே அவர்களின் முன்னேற்ற பாதையில் பெரிய தடையாக அமைந்தது.
இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே–அயர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வேக்கு ஒரு புள்ளி கிடைத்து, மொத்தம் 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதனால் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு முற்றிலும் நழுவியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2009ஆம் ஆண்டில் மட்டுமே அவர்கள் இவ்வாறு வெளியேறியிருந்தனர்.
சரிவில் சாம்பியன் அணி
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ICC Cricket World Cup 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகு, ஐசிசி நடத்திய முக்கிய நான்கு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது.

ICC Men’s T20 World Cup 2024 – சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேற்றம்
ICC World Test Championship Final – தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி
ICC Champions Trophy 2025 – அரையிறுதியில் வெளியேற்றம்
நடப்பு டி20 உலகக் கோப்பை – குரூப் சுற்றிலேயே அதிர்ச்சி வெளியேற்றம்
ஒருகாலத்தில் ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, தற்போது தொடர்ச்சியான தோல்விகளால் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மீண்டும் பழைய பலத்தை நிரூபிக்க அவர்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

