இந்திய ஜனநாயக கட்சியில் பொது செயலாளராக இருந்தவர் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவி லீமா ரோஸ். இவர் த.வெ.க கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மாமியார். லீமா ரோஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
14 ஆண்டுகளாக கட்சியில் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், தனக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் லீமா ரோஸ் வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் அவரது மகன் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
இதனால் திமுக, லட்சிய ஜனநாயக கட்சி அல்லது த.வெ.க கட்சியில் லீமா ரோஸ் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மேலும் வரும் தேர்தலில், திருவாடானை அல்லது கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியை லீமா ரோஸ் சந்தித்து பேசிய நிலையில், அப்போதே அவர் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. அனால் அதற்க்கு லீமா ரோஸ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் குடும்பமே அவருக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சின்ன பிரச்சனையால் அனைவரும் வெவ்வேறு கட்சியில் இருப்பதும் நினைவுகூரதக்கது.

