Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»திமுக கடைசி நேரத்துல நல்லது செய்யும்னு நினைச்ச … எந்த பயனும் இல்ல : அண்ணாமலை அட்டாக்!
    கோவை

    திமுக கடைசி நேரத்துல நல்லது செய்யும்னு நினைச்ச … எந்த பயனும் இல்ல : அண்ணாமலை அட்டாக்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Taking revenge on teachers is the authoritarian trend of the DMK government: Annamalai condemns!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது பேசிய அவர், திமுக அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி வரும் பொழுது புதிய நிதிநிலை அறிக்கை போடப்படும் என்றார். எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும் கூட கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு கடந்து வந்த பாதை வெட்ட வெளிச்சமாக நிதி நிலை அறிக்கையில் காணலாம் என தெரிவித்தார்.

    கடந்த நிதிநிலை ஆண்டில் இன்று வரை நம்முடைய கடன் என்பது 9 லட்சத்து 29 ஆயிரம் கோடியாக உள்ளது. அடுத்த 2026- 27 முடியும் பொழுது மொத்த கடன் என்பது 10 லட்சத்து 62 ஆயிரம் கோடிக்கு செல்லும். அப்படி என்றால், ஒரே ஆண்டில் திமுக அரசை பொருத்தவரை இதனை சமாளிக்க வேண்டும் என்றால் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டி இருக்கும்.

    இந்த நிதிநிலை அறிக்கையில் 10 லட்சத்து 62 ஆயிரம் கோடிக்கு சென்றிருக்கும் என தெரிவித்தார். ஒரு ஆட்சி உள்ளது என்றால் கடனை குறைக்க வேண்டும் ஆனால் தமிழகத்தில் குறைந்த பாடு இல்லை கடனை அதிகரிக்க கூடிய ஆட்சியாக தான் உள்ளது என தெரிவித்தார். கடந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் வருவாய் என்பது 3 லட்சத்து 31, 569 கோடி ரூபாய் ஈட்டுவோம் என்று கூறினார்கள். ஆனால் 3 லட்சத்து 9 ஆயிரம் கோடி தான் வருமானத்தை ஈட்டி உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக வருமானம் ஈட்டி உள்ளார்கள் என தெரிவித்தார். இது வருமானம் இல்லாத அரசு கடனை வாங்கி செலவு செய்யக்கூடிய அரசு என்பது உறுதியாகிறது என தெரிவித்தார். உயர்கல்வித்துறையில் 8505 கோடி அறிவித்துள்ளார்கள். ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையை பார்க்கும் பொழுது 11000 கோடி தான் அதிகம் அண்ணா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க போகிறோம் என்று கூறும் இவர்கள் அதற்கு 1380 கோடி ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார்கள்.

    ஆனால், வெறும் பதினோராயிரம் கோடி ரூபாயை மட்டும் உயர்த்திவிட்டு அண்ணா பல்கலைக்கழக புதுப்பிப்பிற்கு பணம் எங்கிருந்து வரும் என கேள்வி எழுப்பி அது ஒரு ஏமாற்று வேலை என விமர்சித்தார். திமுக அரசு ஆட்சிக்கு வரும்பொழுது 12 ஆம் வகுப்பை தாண்டி மேல்படிப்பு படிப்பவர்கள் தமிழகத்தில் 49% இருந்த நிலையில், தற்போது 47 விழுக்காடு மட்டுமே இருப்பதாகவும் இரண்டு சதவிகிதம் திமுக ஆட்சியில் மேல் படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்தார்.

    ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு 29 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஆண்டு வரும் 28 ஆயிரத்து 687 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது எனக் குறிப்பிட்டார். திமுக அதனை 150 நாட்களாக கொண்டு வருவோம் என்று கூறினார்கள் தற்பொழுது அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் 40 சதவிகிதம் குறைத்துள்ளார்கள் என தெரிவித்தார்.

    கலைஞர் கைவினை திட்டம் குறித்து பேசிய அவர், மத்திய அரசு கைவினை கலைஞர்களுக்கு கடன் கொடுப்பதாக திட்டத்தை கொண்டு வந்தது மாநில அரசில் வெறும் 23,879 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரும்பொழுது பல லட்சம் பேர் அதில் பதிவு செய்தார்கள் என தெரிவித்தார். அப்படி என்றால் அதனை லட்சம் பேர் எங்கு போனார்கள் அதுவும் ஒரு ஏமாற்று வேலை என விமர்சித்தார்.

    இந்த நிதிநிலை அறிக்கையில் கோவில்களை புறனமைப்பு செய்ததற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 8100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், 82 கோடி மட்டுமே அவர்கள் செலவு செய்துள்ளார்கள் என்றும், அத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என்றால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், விவசாயத் துறை என்பது வெறும் மூன்று சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது என்றும், குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த பொழுது பத்தாண்டு காலத்தில் வருடத்திற்கு 10% விவசாயத்துறை உயர்ந்தது என்றும் ஆனால் இவர்கள் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே விவசாயத்தை வளர்த்தியுள்ளார்கள் என தெரிவித்தார்.

    மேலும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வரப்பட்டுள்ளதை தொழில்துறை அமைச்சர் கூட ஏற்றுக் கொள்கிறார் என்றும் கூறினார். மாநில அரசு சொந்தமாக ஒரு திட்டத்தை தொடங்கி அதன் மூலம் வேலை வாய்ப்பை அவர்களால் கொண்டுவர முடியவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தமாக கடன் என்பது பத்து லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயர போகிறது என்றும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு சுயபுராணம் என்று கூறினார்.

    விமான நிலையம் வருவதற்கு முன்பு நிதி அமைச்சரை தான் சந்தித்ததாகவும் அவரை ஒப்புக்கு சப்பாணியாக பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்ததாகவும் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு உருப்படியாக எதுவும் கிடையாது என்பது தான் உண்மை என கூறினார். மேலும், மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் வெறுமனே பேசி விட்டு சென்று விடுவார்கள். ஆனால், நான் புள்ளி விவரத்துடன் கூறுகிறேன் என தெரிவித்தார்.

    தமிழகத்திற்கு பூஜ்ஜியம் ரூபாய் கொடுத்த பட்ஜெட் தான் இது எதுவுமே பிரயோஜனம் இல்லை என்று குறிப்பிட்ட அவர் மத்திய அரசு பட்ஜெட் அறிவிக்கும் போது இவர்களை வீடு வீடாக சென்று முட்டையை கொடுத்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்பொழுது தான் எனக்கு புரிகிறது இவர்கள் இந்த பட்ஜெட்டில் முட்டையை கொடுப்பார்கள் என்பதற்காக தான் அன்று சென்னை முழுக்கவும் முட்டை கொடுத்திருக்கிறார்கள் என்று விமர்சித்தார்.

    மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்று தமிழக அரசின் சிலர் கூறுவது குறித்தான கேள்விக்கு, மத்திய அரசு அவரது பட்ஜெட்டில் அனைத்து மாவட்டத்திலும் பெண்கள் விடுதி அமைக்கப்பட்டும் என்று அறிவித்ததை தமிழக முதல்வர் நம்மிடமிருந்து தான் மத்திய அரசு காப்பியடித்து விட்டது என்று கூறுகிறார். ஆனால் மத்திய அரசில் சகி நிவாஸ் திட்டத்தின் கீழ் வந்ததைத் தான் தமிழகத்தில் தோழி விடுதி என்று ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் நிதியை அதற்கு பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

    கலைஞர் கனவு இல்லம் திட்டம் அதற்கும் மத்திய அரசு பணம் கொடுக்கிறது அதனால் பொய் மட்டுமே பேசி வருகிறார்கள் என தெரிவித்தார். மத்திய அரசு என்றும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படவில்லை என்றும் மாநில அரசுதான் மீண்டும் என்று மத்திய அரசின் மீது ஓரவஞ்சனையுடன் தமிழகத்திற்கு எதுவும் வரக்கூடாது என்று செயல்படுகிறார்கள் என கூறினார்.

    மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பேசிய அவர் மத்திய அரசால் மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார் என்றும், ஆனால் மத்திய அரசு Detail Project அறிக்கையை மாற்றி கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள் அவ்வாறு கேட்டு 5 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் சமர்ப்பித்து இருந்தால் எந்த தேதியில் சமர்ப்பித்தார்கள் என்பதை மக்களிடம் கூறுங்கள் என தெரிவித்தார்.

    விவசாயத்தைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 சதவிகிதம் தான் வளர்ச்சியே உள்ளது என்றும் கூறினார். மேலும், இந்த மூன்று சதவீதம் வளர்ச்சி என்பதற்காக எதற்காக விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தனியாக ஒரு பட்ஜெட் போடுகிறார் என்றே தெரியவில்லை என்றும் விமர்சித்தார். மேலும் விவசாயத் துறை வளர்ந்தது என்றால் என்ன வளர்ந்தது என்று கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

    நேற்று ஒரு நாள் வாதாடியது பற்றிய கேள்விக்கு, அது ஒரு நல்ல அனுபவம் என்றும் பலவற்றை கற்றுக் கொள்ள முடிந்தது என்றும் நம்முடைய வழக்கை நாமே வாதாடும் பொழுது அது எவ்வளவு கஷ்டமான வேலை அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது எல்லாம் புரிந்தது என தெரிவித்தார். டி ஆர் பாலு 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அவர் ஆட்சியில் என்ன செய்து உள்ளார் என்பதை மட்டும் தான் பேசியிருக்கிறோம் இன்னும் அவரது குடும்பம் பற்றி எல்லாம் DMK Filesல் பேசியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பீகாரில் பத்தாயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது அதை தேர்தல் ஆணையம் தவறு என்று கூறவில்லை அதை ஒரு அரசின் திட்டமாக கொண்டுவரப்பட்டது, மகாராஷ்டிராவில் 2100 கொடுக்கப்பட்டது. அதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று கூறிய அவர் இந்தியாவில் ஏதேனும் மாற்றுக் கட்சியினர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு ஏதாவது ஒன்றை தடுத்துள்ளதா என்று கூற சொல்லுங்கள் என தெரிவித்தார்.

    கோடைகாலத்திற்கு 2000 ரூபாய் கொடுக்கிறோம் என்று இவராக கூறிக்கொண்டு இருக்கிறார் என்றும் இதற்கு முன்பு கோடை காலத்தில் எவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு செல்லக்கூடிய எந்த பணத்தையும் யாரும் தடுப்பதில்லை நம்முடைய கூட்டணி அதேசமயம் 2000 ரூபாயை அறிவித்துள்ளது அறிவித்ததை கொடுங்கள் ஆனால் மத்திய அரசு தடுத்தது என்று பொய்யைக் கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    கோடை காலத்திற்காக நிதியை கொடுத்தால் அதனையும் கொடுங்கள் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளட்டும் ஆனால் இந்த ஆண்டு மட்டும் தான் உங்களுக்கு கோடை காலம் தெரிந்ததா என்று கேள்வி எழுப்பிய அவர் தேர்தல் வரும் கோடை காலத்திற்கு மட்டும் பணம் கொடுப்பதை அரசியல் என்றுதான் மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறுகிறோம் என்று தெரிவித்தார்.தேர்தல் முடிந்த பிறகு இதைவிட அதிகமான பணத்தை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாளர்கள் கொடுப்பார்கள் என்றும் மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

    தமிழகத்தில் உரிமை தொகை வாங்கக்கூடிய மகளிர் 32 விழுக்காடு பட்டியல் இனத்தைச் சார்ந்த மக்கள் தான் என்றும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இதற்கு பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். மாநில அரசை பொறுத்தவரை Accounting Fraud செய்தும் மாயாஜாலம் காட்டித்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

    மேலும், இந்த பட்ஜெட்டில் வேறொன்று எதிர்பார்த்தோம் என்று கூறிய அவர் சென்னை மாநகரம் போராட்ட களமாக உள்ளது அங்கு அங்கன்வாடி ஊழியர்கள் செவிலியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என பலரும் போராடி வருகிறார்கள் அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது விடிவு கிடைக்குமா என்று பார்த்தோம் திமுக ஆட்சியில் இருந்து போகும்போது ஏதாவது நல்லதை செய்வார்கள் என்று எண்ணினோம் ஆனால் அதையும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.

    மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏப்ரல் மாதம் வரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்றால் இனி அவர்கள் திமுகவை நம்பி போராடுவது வேஸ்ட் திமுகவை ஆட்சியில் என்று அகற்றுவதற்காக உடன்பட்டு செயலாற்ற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்று கூறினார்.

    இனி அடுத்த 15 நாட்களுக்கு அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் பொழுது இதை செய்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது நாங்களும் அதனை செய்யப் போகிறோம் என்று தெரிவித்தார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலை செய்ய வேண்டுமே தவிர சுட்டெரிக்கும் வெயிலில் போராடுவது எந்த ஒரு லாபத்தையும் கொடுக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் பேசியது தொடர்பான கேள்விக்கு, அது வேட்டை நாயுடன் சண்டை போடுவேன் அதே சமயம் வேட்டை நாய் பிடிக்கக்கூடிய முயலுடனும் நண்பராக இருப்பேன் என்ற பழமொழியை போன்று தான் என்றார். இது எந்த காங்கிரஸ் கட்சி என்று மிகவும் குழப்பமாக உள்ளது என்றும் மணிசங்கர் அய்யர், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி செல்வப் பெருந்தகை என்று நான்கு பேரில் நிலைகளையும் பார்க்கும் பொழுது இது காங்கிரஸ் கட்சியை இல்லை 10 பேர் ஃபெவிகால் சேர்த்து ஒட்டி இந்த கட்சியை நடத்துகிறார்கள் என்பது போன்று தான் இருக்கிறது என்று விமர்சித்த அவர் அவர்கள் என்னதான் தனியாக குதித்தாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை ஆட்சிக்கு வந்தால் தானே அதிகார பகிர்வு இருக்கும் என்று கூறினார்.

    எனவே காங்கிரஸ் கட்சியினர் வீட்டில் அமைதியாக இருந்து சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்த பாஜக மாவட்ட தலைவர் பேசியது தொடர்பான கேள்விக்கு, ஜோதிமணி மீது 1008 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றத்தில் அவர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை என்றாலும் கூட தனி மாநில விமர்சனத்தை யாராக இருந்தாலும் வைப்பது ஏற்புடையது அல்ல நேற்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் தொலைபேசி மூலம் அணுகி என்னுடைய கருத்தை தெரிவித்ததாகவும் ஜோதிமணி அவரையும் செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை அவர் என்னை தொடர்பு கொள்ளும் பொழுது என்னுடைய வருத்தத்தை தெரிவிப்பேன் என்று பதில் அளித்தார்.

    ஆரோக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று என் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.நயினார் நாகேந்திரன் அவரும் நடிகர் திரிஷா பற்றி பேசி இருந்தது தொடர்பான கேள்விக்கு நேற்று அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார் அத்துடன் அந்த விஷயம் முடிந்து விட்டது என பதில் அளித்தார். அரசியலில் நாம் செய்வது எதிர்கட்சி நிற்க பிடிக்காமல் இருக்கலாம் அவர்கள் செய்வது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்காக நாம் விமர்சிக்கும் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையின் கணம் என்று ஒன்று உள்ளது அவர் பேசும் பொழுது சமூக வலைத்தளங்கள் பத்திரிகை செய்திகளில் உடனே வெளியாகிறது எனவே அவ்வாறு பேசக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து என தெரிவித்தார். அரசியல் முதிர்ச்சி அடைந்து விட்டீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதில் அளித்தார்.

    Annamalai BJP Annamalai speech highlights BJP press meet Tamil Nadu Political press conference Tamil Tamil Nadu politics news அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு பாஜக அரசியல் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    April 3, 2026

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    April 2, 2026

    நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.