நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பராசக்தி. படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அடுத்த படத்தை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார்.
இதனால் அடுத்த படத்தின் கதையை மும்முரமாக கேட்டு வரும் சிவகார்த்திகேயன், மீண்டும் கமல்ஹாசன் உடன் கைக்கோர்த்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கமல், சிவகார்த்திகேயன், சிவக்குமார் முருகேசன் கூட்டணியில் படம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிரட்டியிருந்தது.
சேயோன் என படத்தின் டைட்டில் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் தோற்றம் கம்பீரமாக இருந்தது. இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால், படக்குழு பிரோமோ வெளியாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இந்த படம் 2026 அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

