கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார்.
ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார். முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார். முன்னதாக, விஜய் வர்மா உடன் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால், அவருடன் நடித்த போதுதான் இவர் எனக்கானவர் என்பதை நான் உணர்ந்தேன் என்று வெளிப்படையாகவே தன் காதலை ஒப்புக்கொண்டிருந்தார்.

இவர்களின் திருமண தேதி விரைவில் வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில், தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக முணுமுணுக்கப்பட்டது. இதெல்லாம் வதந்தியாய் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

ஆனால், பிரபல நடிகை பாத்திமா சனா சாய்க் என்பவரை விஜய் வருமா காதலிப்பதாகவும், கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலியை அறிமுகம் செய்தும் வைத்துள்ளார் விஜய் வர்மா. புதிய காதலியின் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

ட்ரோல் செய்யும் வகைகள் இருக்கும் ஒரு இன்ஸ்டா கணக்கின் லிங்கை அதில் அவர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். விஜய் வர்மா இப்படி ஒரு பக்கம் சேட்டை செய்து கொண்டு இருக்க நடிகை தமன்னா மகா சிவராத்திரிக்கு ஈஷா யோக மையத்தில் கடவுளே கதி என மனமுருகி சிவனை வழிபட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் உங்களுக்காக நாங்க இருக்கும் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

