சேலத்தில் இன்று நடந்த தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கரூர் கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-
உயிரிழந்த சுர்ஜித் என்ற நபர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தவெகவினர் செய்திளாகர்ளை தடுத்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், இந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்தோம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவர் குடும்பத்தினர் கூறியிருந்தனர். நாங்கள் முதலுதவி வழங்கியும் ஆம்புலன்ஸ் அனுப்பியும் அவர் காலமானார்.

அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் களத்தில் உள்ளோம். 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், குறைவாகவே அனுமதித்தோம். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடும் மேற்கொண்டு, 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மினி கிளினிக்குகள் இருந்தன.
சேலம் மருத்துவமனையில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும் சிறிய மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது முதல் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எதிர்காலத்தில் அப்படி நடக்கக்கூடாது என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

