பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான படம் கோமாளி. பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது.
தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன், அதனை தொடர்ந்து நடித்த ட்யூட் படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டி ஹாட்ரிக் வெற்றியை பெற்றார்.
வரிசையாக ஹிட் கொடுத்த பிரதீப், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்துள்ளார். பட வேலைகள் முடிந்தும், இன்னும் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பிரதீப்.
.

இதனிடையே நடிப்பும் வேண்டும், இயக்கத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற மைண்ட் செட்டில் உள்ள பிரதப், சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் ஒன்றை பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாகவும் அவரே அதில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர் கூறும் போது, நான் கல்லூரி படிக்கும் எதிலும் கலந்து கொள்ளவில்லை. வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன், அதற்காக வருத்தப்பட வேண்டாம், நமக்காக ஒரு பாயிண்ட் வரும், அப்போது உலகமே வேடிக்கை பார்க்கும் என கூறினார்.

