Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»தொழில் நஷ்டமடைந்து வேலைக் கேட்டு என்னிடம் வந்தவர் இபிஎஸ் : அமைச்சர் பேச்சை நோட் பண்ணுங்க!
    தமிழ்நாடு

    தொழில் நஷ்டமடைந்து வேலைக் கேட்டு என்னிடம் வந்தவர் இபிஎஸ் : அமைச்சர் பேச்சை நோட் பண்ணுங்க!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    EPS is the person came to me after losing his Business and asking for a job says DMK Minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

    நாம் பலபேரை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தோற்கடிக்க வேண்டும்.

    மத்தியஅரசு நியாயமானதை சொன்னால் ஏற்போம். நியாயமற்றதை சொன்னால் ஏற்க மாட்டோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் நமக்கு மோசமான அளவில் நிதி கொடுக்கிறார்கள். பீகார் உத்தரபிரதேசத்திற்கு அதிக நிதி கொடுக்கிறார்கள்.

    அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது. அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். நிர்வாகிகள் சீட்டுக்காக அங்கு உள்ளனர்.

    நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதற்காக வருத்தப்படவில்லை. மிட்டா மிராசுகளை பண்ணையார்களை எதிர்த்து உருவானது தான் நம் இயக்கம்.

    காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். காங்கிரசை பற்றி நான் குறை சொல்லவில்லை. காங்கிரசில் ஆள் இல்லை. நாம் இல்லாமல் காங்கிரஸ் அரசியல் நடத்த முடியாது. அது முதல்வர் முடிவு எடுத்துக்கொள்ளட்டும்.

    தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. மதுரையில் மாநாடு நடைபெற்றது யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள். மற்றவர்கள் 15 வயது உள்ள ஆட்கள் அதிகமாக இருந்தார்கள்.

    எம்ஜிஆர் திமுகவின் இருந்து ஒரு சின்ன அரசியல் செய்தார். எம்ஜிஆர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்ததால் தான் பக்குவப்பட்டார்.

    நமது முதல்வர் 55 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். யார் பின்னால் எங்களை போன்றவர்கள் செல்ல வேண்டும் என உள்ளது.

    எனக்கு பின்னால் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ ஆனவர். என்னை சந்திக்க ஜெயலலிதா அழைத்த போது சும்மா சென்று வா எனச் சொன்ன தலைவர் கருணாநிதி. என்னை பிள்ளை போல வளர்த்தவர் கருணாநிதி.

    அரசியல் தலைவருக்கு இலக்கணமானவர் கருணாநிதி. நான் இளையான்குடியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற போது என்னை அதிமுக கட்சிக்கு அழைத்தவர் ஜெயலலிதா.

    நான் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் போது 64ஆயிரம் பேருக்கு வேலை போட்டு கொடுத்தேன். இப்போது அப்படி போட முடியவில்லை. மந்திரி பதவி என்பது வரும் போகும்.

    அதிமுகவில் இப்போது இருப்பவர்கள் தலைவர்கள் இல்லை. ஒருகாலத்தில் மண்டைவெல்லம் விற்றவர் எடப்பாடி பழனிசாமி. தொழில் நஷ்டமடைந்து என்னிடம் வந்தார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை போட்டு கொடுத்தவன். பின்பு செங்கோட்டையனை அழைத்து வந்தார். தற்போது அமித்ஷா பிடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    EPS is the person came to me after losing his Business and asking for a job says DMK Minister

    அங்கு தங்கமணி வேலுமணி வீரமணி எல்லாம் MONEY MONEY என உள்ளனர். நன்றாக சம்பாதித்து இன்று பெரிய கோடீஸ்வரராக எடப்பாடி உள்ளார்.

    வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படும் இயக்கம் திமுக அல்ல. ஸ்டாலினை விட்டுவிட்டால் நமக்கு நல்லதல்ல. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்பது போல யாருக்கும் எந்தக்குறையும் இல்லை.

    அரசியல்வாதி என்பது தொழில் தான். நான் 12முறை தேர்தலில் 4 முறை தோற்றுள்ளேன். 8 முறை வென்றுள்ளேன். அரசியவாதியாக வந்தால் நிலைக்க வேண்டும். வந்தோம். சென்றோம் என இருக்கக்கூடாது. அரசியல்வாதிக்கு லாபமும் இருக்கும். நஷ்டமும் இருக்கும்.

    என்னை பார்க்க தமிழ்நாடு முழுவதும் ஆட்கள், மக்கள் அதிகமாக வருவார்கள். நான் அவர்களை முழுவதுமாக சந்திப்பேன்.இப்போது 100ல் ஒரு பங்கு தான் வருகிறார்கள். வேலை வேண்டும் மற்ற சிபாரிசுகளுக்கு கேட்டு அதிகமாக வருவார்கள். பின்னால் வருவார்கள். இப்போது யாரும் வருவதில்லை. இப்போது எல்லோரும் மெரிட்டீல் செல்கிறார்கள்.

    மார்ச் மாதம் பிரதமர் வர உள்ளார். தமிழகத்திற்கு பிரதமர் கடந்தமுறை 8 முறை வந்தும் என்ன கிழித்தார். குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் பாஜகவால் இங்கே முடியாது. பாஜக காலூன்ற முடியாது என பேசினார்.

    Aiadmk DMK Edappadi Palaniswami Minister Raja Kannappan அஇஅதிமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் எடப்பாடி பழனிசாமி திமுக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.