சாய் பல்லவி, தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாகி பின்னர் மலையாள சினிமா மூலம் அறிமுகமானார்.
பிரேமம் படத்தால் பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு, நடனம் என பின்னி பெடலெடுக்கும் சாய் பல்லவி, நிஜத்தில் ஒரு மருத்துவர்.
ஏகப்பட்ட திறமை வைத்திருந்த சாய் பல்லவி தற்போது இந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார். அமரன், கார்கி படங்கள் தமிழில் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில், தனுஷ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். இதை தவிர கல்கி படத்தின் அடுத்த பாகத்தில், தீபிகா படுகோனேவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், தனுஷ் உடன் நடிக்கும் D55 படத்தில் தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் உடன் மாரி 2 படத்தில் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

