பொங்கல் ரேசில் சூர்யா படமும் சூப்பர் ஸ்டார் படமும் மோத உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இது தவிர வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். தற்போது, அவரது 47 வது படமும் துவங்கியுள்ளது. இந்நிலையில், பொங்கலுக்கு சூரியா படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் கமலஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ரிலீசாக உள்ளது என்று அறிவிப்புடன் தான் படத்தின் அறிவிப்பே வெளியானது.
இது ஹாலிவுட் படமான அவுட் ஃபிட் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலுக்கு சூர்யா படமும், சூப்பர் ஸ்டார் படமும், மோத உள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

