இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. 13வது போட்டியான தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பலப்பரீட்சை நடந்தன.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிதான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது.
இதையடுத்து சூப்பர் ஓவர் போட்டி வைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு ஓவரில் 17 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியும் 17 ரன்களை எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

முதல் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக மாறியது. 2வது சூப்பர் ஓவரில் தென்னாப்பரிக்க அணி முதலில் பேட் செய்து 23 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

போட்டியில் தோல்வியடைந்ததும் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் குமுறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

