தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
இரண்டு மகளிர் அணி மாநாடு கோவை மண்டலத்திற்கும் தஞ்சை மண்டலத்திற்கும் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. இளைஞரணி மாநாடு விருதுநகரிலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இதற்குப் பிறகு தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதற்கு பின்பு மாநில மாநாடு நடைபெறும். இதற்குப் பின்பு இளைஞர் அணி மகளிர் அணி மாநாடு இருக்காது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியவில்லை. வேறு யாருக்கும் பேசக்கூடிய வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சி தலைவரே கூட இல்லை பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பயப்படக்கூடிய சூழ்நிலை அவர்களுடைய ஆட்சியிலே இருக்கு என்று அவர்களே சொல்கிறார்கள்.
நிச்சயமாக பிரதமர் இப்படிப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவோட வெளிநாடுகளோடு செய்யப்படும்போது அமைச்சர்கள் நாடாளுமன்றம் நடந்து கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அதைப்பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டும் அதுதான் மரபு.

பிரதமர் குடியரசுத் தலைவரின் உரைக்கு பதில் சொல்லும்போது இதைப்பற்றி தெளிவாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எதையுமே சொல்லாமல் இந்திய பிரதமரை அறிவிக்காமல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிக்கக்கூடிய ஒரு சூழல் பின்பு தான் இவர் இப்படி ஒரு ஒப்பந்தம் கையளித்தாகி இருக்கிறது என்று கூறுகிற நிலைமை.
இதில் அவர்கள் கொண்டு வரக்கூடிய இந்த பொருளுக்கும் இங்கே அனுப்பக்கூடிய இந்தியாவிற்கு அனுப்பக்கூடிய பொருளுக்கு ஜீரோ சதவீதம் வரி இன்றைக்கு சொல்லிவிட்டு நாம் அங்கு அனுப்பக்கூடிய பொருளுக்கு 18 சதவீதம் வரி என்று கூறும்போது எப்படி நியாயமான ஒப்பந்தமாக இருக்க முடியும்.

மிகப்பெரிய கவலை என்னவென்றால் அவர்களுடைய வேளாண் பொருட்கள் இங்கே வரக்கூடாது நம்முடைய விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் இந்தியாவை டம்பிங் கிரவுண்ட் மாதிரி மாற்றி விடுவார்கள் என்பதால் தொடர்ந்து இதை இந்தியா எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் வழியாக இந்த கதவுகளை திறந்து விட்டால் நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

