உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஷ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடை யயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்களிடம் இருந்து விசில் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. மேலும் மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டதால் பேசு பொருளானது.

இது குறித்து தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் “விசில்” சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதியின் ஆட்சி நடக்கும்..! என பதிவிட்டுள்ளார்.
